RRB Tamil Current Affairs 27th August 2018

உலக செய்திகள்
  1. நாட்டிலேயே முதல்முறையாக பயோ–எரிபொருளை 25 சதவீதம் கலந்து விமானத்தைச் சோதனை முயற்சியாக இயக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
  2. ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவியேற்று கொண்டார்.
தேசிய செய்திகள்
  1. தமிழ்நாட்டில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் வை-பை(Wi-Fi) வசதியுடன் கூடிய செயற்கை மரம் அமைக்கப்பட்டுள்ளது.
  2. உலகிலேயே மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலை (182 மீட்டர் உயரம்) அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் திறக்கப்படவுள்ளது
  3. சிறந்த மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையுடன் இணைந்து மகளிர் தொழில் முனைவோர் சங்கம் நடத்திய 2018ம் ஆண்டிற்கான ‘மகளிர் தொழில்முனைவோர் மாநாடு(Woman Entrepreneurship Summit – 2018) புது டெல்லியில் நடைபெற்றது
  4. இந்தியாவில் தோன்றிய யோகா-வை உலகறியச் செய்யும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா 2018 தொடங்கியுள்ளது. இத்திருவிழா தமிழக சுற்றுலாத் துறையால் நடத்தப்படுகிறது.
  5. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  6. சிக்கிம் மாநிலத்தின் 16வது ஆளுநராக பீகாரைச் சேர்ந்த கங்கா பிரசாத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. மேகாலயாவில் நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றார்.
வர்த்தக செய்திகள்
  1. உலக வங்கியானது முதல் பொதுவான சங்கிலித் தொடர் பத்திரமான ஐ – பத்திரத்தை (Bond – I ) தொடர் இணைப்பில் உள்ள புதிய கடன் கருவியை (Block Chain Offered New Debt Instrument) உருவாக்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. பெல்ஜியம் நாட்டின் ஸ்டேவ்லெட் நகரில் நடைபெற்ற 11வது கிராண்ட் பிரிக்ஸ் கார்ப்பந்தயப் போட்;டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டின் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  2. ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளி்ல் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்
Previous Post Next Post