உலக செய்திகள்
- சீனாவில் சர்வதேச படியேறும் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க் பர்ன் ((Mark Bourn)) வெற்றி பெற்றார்.
- இந்தியா – சிங்கப்பபூர் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு 2-வது திருத்த ஒப்பந்தம், இந்திய அரசு தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரஜ்னீஸ் மற்றும் சிங்கப்பூர் அரசின் தொழில்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பிரான்சிஸ் சோங் இடையே புதுடெல்லியில் கையெழுத்தாகி உள்ளது.
தேசிய செய்திகள்
- உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பேபி ராணி மவுரியா பதவியேற்றுக் கொண்டார்.
- உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மரங்களுக்கு கிரீன் பெல்ட் எனும் பெயரில் ராக்கி கயிறு கட்டியும், அரவணைத்தும் சிறுவர், சிறுமியர் ரக்சா பந்தன் கொண்டாடினர்.
- மகளிர் மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் 2018ம் ஆண்டை அறிவித்துள்ளது. Reaching every household with Message of Nutrition என்பதே இதன் கருப்பொருளாகும்
- ஆதித்யா சவுபே நீர் மறுபயன்பாட்டிற்கான ஆராய்ச்சி மையம் (Aditya Choubey Center For Re-water Research) என்னும் பெயரில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயனுள்ள நீராக மாற்றுவதற்கான ஆராய்ச்சி மையத்தை ஐ.ஐ.டி கரக்பூர் (IIT Kharagpur) அமைத்துள்ளது.
- ஆதித்யா சவுபே நீர் மறுபயன்பாட்டிற்கான ஆராய்ச்சி மையம் (Aditya Choubey Center For Re-water Research) என்னும் பெயரில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயனுள்ள நீராக மாற்றுவதற்கான ஆராய்ச்சி மையத்தை ஐ.ஐ.டி கரக்பூர் (IIT Kharagpur) அமைத்துள்ளது.
- புயல் கணிப்பு மற்றும் வானிலை மாற்றங்கள் தொடர்பானவற்றை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடும் வகையில், கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கவுள்ளது
- இந்தியாவிலுள்ள பௌத்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் மற்றும் நாட்டின் பௌத்த தலங்களுக்கு சுற்றுலாவை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சர்வதேச பௌத்த சம்மேளனத்தை (International Buddhist Conclave) புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார்.இம்மாநாட்டின் கருப்பொருள் : Buddha Path – The Living Heritage.
- மஹாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் (Sanjay Gandhi National Park) விளம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
- ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட ரசீதுகள் தள்ளுபடி அமைப்பு (TReDS – Trade Receivables Discounting System) மூலம் பரிவர்த்தனை செய்த முதல் பொதுத் துறை நிறுவனமாக (Public Sector Unit – PSU) இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உள்ளது.
விளையாட்டு செய்திகள்
- குதிரையேற்றப் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஃபெளவத் மிர்ஸா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- 400 மீட்டர் ஓட்டத்தில் மகளிர் பிரிவில் வீராங்கனை ஹீமா தாசும், ஆடவர் பிரிவில் வீரர் முகமது அனாசும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
- 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் டுட்டி சந்த் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்