RRB Tamil Current Affairs 25th August 2018

உலக செய்திகள்
  1. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றுள்ளது.
  2. சர்வதேச அளவிலான தரம் மற்றும் உலக அளவிலான பயணங்களின் வளர்ச்சி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலக அளவில் வேகமான வளர்ச்சியடையும் விமான நிலையங்களில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள ஹெனடா விமான நிலையம் முதலிடத்திலும் பெங்களுரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம்’ 2வது இடத்திலும் உள்ளன.
  3. BIMSTEC கூட்டமைப்பு நாடுகளின் நான்காவது உச்சி மாநாடு, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு -இல் நடைபெறவுள்ளது.
  4. ASSOCHAM – அசோசெம் எனும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் புதிய பொதுச்செயலராக உதய் குமார் வர்மா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய செய்திகள்
  1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  2. வாக்காளர்கள் தங்கள் தொகுதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கவும், மதிப்பீடு செய்யவும், நேதா(NETA – National Electrical Transformation) என்னும் செல்லிடைப்பேசி செயலியை முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி புதுடெல்லியில் அறிமுகபடுத்தி உள்ளார்.
  3. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு அமைப்பின் தலைவராக ஜி.சதீஸ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. உலகளாவிய காற்று கூறு விவரங்களை கண்காணிப்பதற்கான திறனுடன் கூடிய முதல் செயற்கை கோளான அயோலஸ் எனும் செயற்கை கோள் பிரஞ்சு நாட்டின் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
வர்த்தக செய்திகள்
  1. சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் Moody’s Analytics) நடப்பாண்டில் (2018-19)ல் இந்தியாவின் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது
  2. ராணுவத்திற்கு சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறைக்கான கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. ஆசிய விளையாட்டி போட்டியின் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தர்ஜிந்தர்பால் சிங் தங்கப்பதக்கம் வென்றார்.
  2. ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் போட்டியில் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இரங்கல்
  1. மூத்த பத்திரிக்கையாளரும் பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் காலமானார்
Previous Post Next Post