RRB Tamil Current Affairs 24th August 2018

உலக செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவின் 30-வது பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2. நேபாள தலைநகர் காத்மண்டுவில் நான்காவது BIMSTEC உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
  3. இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்;து கேப்டன் டேவிட் பெக்காமிற்கு UEFA ஜனாதிபதி விருது (கால்பந்பந்தாட்டத்திற்கான பங்களிப்புக்காகவும், விளையாட்டை ஊக்கமளித்ததற்கும்) வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. மத்திய நகர்ப்புற வளர்ச்சி கழகம் நாட்டில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியலை (2018) வெளியிட்டுள்ளது. இதில் சாகர் (மத்தியப் பிரதேசம்) முதலிடத்தையும் திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்) இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது
  2. சத்தீஸ்கர் மாநிலம் தோற்றுவிக்கப்பட்ட நவம்பர் 1ம் நாள், சிறந்து விளங்கும் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புறங்களுக்கு வாஜ்பாய் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
  3. உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார் 7 இடத்திலும், சல்மான்கான் 9வது இடத்திலும் உள்ளனர்.
  4. 12ம் வகுப்பு முடித்தவர்களும் ஆசிரியர்களாகலாம் என இராஜஸ்தான் துணை அமைச்சக சேவை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  5. பட்டய கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் விதமாக இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) CAjobs.com என்கிற தளத்தினை தொடங்க உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  2. ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் போபண்ணா –ஷரன் இணை தங்கப் பதக்கம் வென்றது.
  3. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 4 பேர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றனர்
  4. ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
Previous Post Next Post