உலக செய்திகள்
- ஹென்க் பேக்கிடம் எஸ்.கே. அரோராவுக்கு WHO உலக புகையிலை இல்லா நாள் 2018-க்கான(WHO World No Tobacco Day 2018 Award)விருதை வழங்கினார்.
- மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மனித உரிமைகளை அந்நாட்டின் இராணுவம் மற்றும் போலீஸ் கமாண்டர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
- மெரிக்க அரசினால் வழங்கப்படும் சிறந்த இராணுவத் தளபதிக்கான லெஜியன் ஆப் மெரிட் விருது (Legion of Merit Award) ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்-விற்கு (Dalbir sing suhag) வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் 2018 ஆம் ஆண்டை அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை குழுவின் தலைவராக கூடுதல் டி.ஜி.பி. ‘சீமா அகர்வால்’ தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப மாநாடு (ICRAFPT) தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நடைபெற்றது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி ஸெங் (Li Zeng) தலைமையிலான விஞ்ஞானிகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல உயிர்வாழக் கூடிய மூன்று கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார்
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றனர்
- அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.