RRB Tamil Current Affairs 20th August 2018

உலக செய்திகள்
  1. நாசாவுக்கு விண்கலம் தயாரித்த கொடுத்தது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
  2. ஹாங்காங்கில் தமிழகத்தை சேர்ந்த ஆவின் பால் விற்பனை செய்யப்படவுள்ளது
  3. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக்கு (FAO), 2019ம் ஆண்டை சர்வதேச கம்பு (திணை – சிறுதானிய) ஆண்டாக (International year of millets) அறிவிக்குமாறு இந்தியா கோரிக்கைவிடுத்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன்மூலம் இத்திறன் படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. 10 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 750 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியாக தாக்கும் திறன் படைத்தது.
  2. இரயில்வேயின் தங்க நாற்கர திட்டத்தின் ஒரு அங்கமாக மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கரக்பூர், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா இடையிலான, 1114 கி.மீ நீள பாதையில் கிழக்கு கடற்கரை சரக்கு பாதை திட்டம் வரும் 2019ம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படவுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. பாதுகாப்பான ஓட்டுநர் - பாதுகாப்பான பயணம் என்கிற முழக்கத்தினை முன்வைத்து பெண்களுக்கு பயிற்சி பள்ளிகளை டொயோடா தொடங்கியுள்ளது.
  2. வெள்ளத்தால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ள கேரள மக்களுக்கு வங்கிக் பரிவர்த் தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிப்பதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அறிவித்துள்ளன
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அதிநவீன ஏவுகணையை இந்தியா, ஹரிஹந்த் – என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
நியமனங்கள்
  1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான தலைவராக வி.ஆர். லலிதாம்பிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ககன்யா திட்டம் 2022-ம் ஆண்டிற்குள் செலுத்தப்படவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது இதில் மல்யுத்த பிடியில் இந்திய வீரரான பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார்
  2. இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டியில்   துப்பாக்கிச்சுடுதல் டிராப் பிரிவில், இந்தியா வீரர் லக்‌ஷய் வெள்ளிப்பதக்கம் வென்றார்
  3. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவுவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  4. ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில்  இருந்து ஓய்வுபெறுகிறார்
இரங்கல்
  1. இஸ்ரேலிய பத்திரிகையாளர் மற்றும் அமைதி செயல்வீரர் உரி அவனேரி காலமானார்
  2. ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் காலமானார்
Previous Post Next Post