உலக செய்திகள்
- உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு மெய்நிகர் தொல்நுட்பத்தின் மூலம், தொடு உணர்வை ஏற்படுத்தி சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- உலகின் மிக உயரமான மின்கோபுரம் அமைக்கும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. ஷிஜியாங் ((Zhejiang)) மாகாணத்தில் உள்ள சௌஷான் நகரத்தில் ((Zhoushan)) மின்கோபுரங்கள் 380 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது
- சீனா தலைநகர் பெய்ஜிங்கில் சர்வதேச ரோபோ கண்காட்சி தொடங்கியது
தேசிய செய்திகள்
- இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை லண்டனில் மீட்கப்பட்டது.
- சுதந்திர தினத்தையொட்டி நேபாள மருத்துவமனைகளுக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பஸ்களை இந்தியா வழங்கியுள்ளது.
- தியாகிகள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்வு, தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2% உள் ஒதுக்கீடு ஆகியவற்றிற்காக புதிய திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
விளையாட்டு செய்திகள்
- ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்
இரங்கல்
- முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்
- இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்