உலக செய்திகள்
- அமெரிக்காவில் முதன்முறையாக Christine Hallquist என்கிற திருநங்கை கவர்னர் பதவிக்கான வேட்பாளராக களமிறங்கியுள்ளார்
- விண்வெளியில் இராணுவப்படை அமைக்க அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது
- உலகின் மிக சிரியவகை கடற் குதிரை ஜப்பானிய கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- தேசிய செய்திகள்
- நீர்வாழ் உயிரினங்களையும் உயிரியல் மேன்மைக்கு உதவும் உயிரினங்களையும் கொள்ளும் 16 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது
- சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ராஜஸ்தானில் சுமார் 700km தொலைவிற்கு மனிதசங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது
- பள்ளிக்கு செல்லும் மாணவிகள் புகார்களை தெரிவிக்க ‘14417’ என்ற இலவச செல்போன் எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
- நாட்டில் 50 கோடி மக்கள் ரூ..5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
வர்த்தக செய்திகள்
- நாட்டின் நடப்பு ஆண்டின் நிதி பற்றாக்குறை 1800 கோடி டாலராக அதிகரிப்பு
- புனேவைச் சேர்ந்த நூற்றாண்டுகள் பழமையான காஸ்மாஸ் கூட் டுறவு வங்கியில் சைபர் அட்டாக் மூலம் ரூ.94 கோடி மோசடி நடைபெற்றுள்ளது
- இ-பே இணையதள செயல்பாடுகள் மூடப்படுவதாக அதன் தாய் நிறுவனமான பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
விருதுகள்
- சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் ஏ.டி.துரைகுமார் மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலர் சத்தியன் குப்புசாமி ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக அரசின் துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவலா விருது முத்துமாரிக்கு வழங்கப்படுகிறது.
- உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் சிறந்த பேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
- அப்துல் கலாம் விருது - சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது
- சுதந்திர தின விழாவையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
- சத்தீஷ்கார் கவர்னர் பல்ராம்ஜி தாஸ் தாண்டன் மறைவையடுத்து, அம்மாநில கவர்னராக மத்தியபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் கூடுதல் பொறுப்பேற்கவுள்ளார்