உலக செய்திகள்
- வரலாற்றை மாற்றியமைத்த பெண்கள் பட்டியலில் மேரி கியூரி முதல் இடத்திலும், மதர் தெரேசா 20 வது இடத்திலும் உள்ளனர்
- காகத்யா என்ற திட்டத்தின் தாக்கம் குறித்து ஆராய்வை மேற்கொள்ள தெலுங்கானா மாநிலம் மித வெப்ப மண்டல பகுதிகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி பயிர்கள் நிறுவனத்துடன் (ICRISAT – International Crops Research Institute for the Semi – Arid Tropics) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை போக்குவரத்து நிறுவனமான இரயில்வேயின் வரலாற்றை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கில் 72வது சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) முதல், கோவை, ஈரோடு, டெல்லி உள்பட 22 இரயில் நிலையங்களில் டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
தேசிய செய்திகள்
- ராஜ்நாத் சிங் NDMC ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் புது டெல்லி மாநகரத்தில் தொடங்குகி வைத்தார்
- இந்தியா 2 வது லுனார் மிஷன் ‘சந்திரயான் -2′வை துவக்க உள்ளது.
- டாக்டர் மகேஷ் ஷர்மா கலாசார அமைச்சர் (Minister of state for Culture),இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ்(Indira Gandhi National Centre for the Arts) – புது தில்லியில் ‘Jewellery’– டாக்டர் குலாப் கோத்தாரி, ‘Ghats of Banaras’– டாக்டர் சச்சினந்த் ஜோஷி மற்றும் ‘Untold Story of Broadcasting’– டாக்டர் கௌதம் சாட்டர்ஜி, ஆகிய 3 புத்தகங்களை வெளியிட்டார்.
- முதன் முறையாக இந்தியாவில் மூன்று நீர் விமான தளங்களை(water Aerodromes) நிறுவ மத்திய விமானத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் சரியான கோட்பாடு. ஆனால் வரும் பொதுத் தேர்தலில் அதை நடைமுறைபடுத்த முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தெரிவித்தார்.
வர்த்தக செய்திகள்
- அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் உஷாவை அந்தப் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
- இந்திய வங்கித்துறை வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ் அமைப்பு கணித்துள்ளது.
- கோட்டக் வெல்த் ஹாருன்-2018-ல் அதிபணக்காரப் பெண்கள் பட்டியலில் சுமார் ரூ.37,570 கோடி மதிப்புள்ள சொத்துடன் கோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.
- சமையில் எண்ணெயை சேரித்தல் அதனை பயோடீசலாக மாற்றும், RUCO (Repurpose Used Cooking Oil) (பயன்படுத்திய சமையல் எண்ணெய்) என்னும் முன்மாதிரி திட்டத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI – Food Safety and Standards Authority of India) துவக்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்
- Asian Tour தலைப்பை இந்திய கோல்ப் வீரர் விராஜ் மடப்பா வென்றார்.
- ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்
- ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்திடம் விராட் கோலி முதலிடத்தை இழந்தார்.
இரங்கல்
- சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டான்டன் காலமானர்.