RRB Tamil Current Affairs 13th August 2018

உலக செய்திகள்
  1. டோக்யோவில், கிசிஜோய்((Kichijoi)) என்ற பகுதியானது ஜப்பானிய மொழியில் இந்துக் கடவுள் லக்ஷ்மியைக் குறிப்பதால், அப்பகுதிக்கு லக்ஷ்மி என பெயரிடப்பட்டுள்ளது
இந்திய செய்திகள்
  1. சி.பி.எஸ்.இ. வினாத்தாள் கசிவதை தடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது.
  2. நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரிக்கத் திரட்டப்பட்ட 66ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு பசுமையை மேம்படுத்துவதற்காக விடுவித்துள்ளது.
  3. மணிப்பூர் மாநிலத்தில் அன்னாசிப் பழ திருவிழா தொடங்கியது
  4. நாட்டில் வாழத் தகுதியுள்ள நகரங்களின் பட்டியலில் திருச்சி 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 111 நகரங்களில் புனே, நவி மும்பை, கிரேட்டர் மும்பை, திருப்பதி, சண்டிகர், தானே, ராய்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. சென்னை 14-வது இடத்திலும், கோவை 25-வது இடத்திலும் உள்ளன.
  5. நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் மிகவும் தூய்மையானவை என்கிற பட்டியலில் ஏ1 பிரிவில் ராஜஸ்தானின் ஜோத்பூர் நிலையம் முதலிடத்தையும் ஜெய்ப்பூர் நிலையம் இரணடாமிடத்தையும் பிடித்துள்ளன. ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மூன்றாமிடத்தையும் விஜயவாடா நான்காமிடத்தையும் பிடித்துள்ளன. ஏ பிரிவில் ராஜஸ்தானின் மார்வார் முதலிடத்திலும் புலேரா இரண்டாமிடத்திலும் உள்ளன.
வர்த்தக செய்திகள்
  1. மத்திய அரசின் 343 திட்டங்களில் 60 சதவீத திட்டங்கள் ரயில்வே துறை சம்பந்தப்பட்டவை என் றும் இவற்றுக்கு ஏற்கெனவே திட்ட மிட்ட தொகையைவிட ரூ.82 லட்சம் கோடி கூடுதலாக செலவாகி வருவதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  2. கோட்டக் வெல்த் ஹாருன்-2018-ல் அதிபணக்காரப் பெண்கள் பட்டியலில் சுமார் ரூ.37,570 கோடி மதிப்புள்ள சொத்துடன் கோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.
விளையாட்டு செய்திகள்
  1. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எந்த விதத்திலும் பங்களிப்பை வழங்காத வீரர் என்ற பட்டியலில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அடில் ரஷீத் இடம் பிடித்துள்ளார்.
  2. கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் சிமோனா ஹாலேப்பும் பட்டம் வென்றுள்ளனர்.
  3. தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், திண்டுக்கல் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செய்திகள்
  1. மாதந்தோறும் இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தப் போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
இரங்கல்
  1. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
Previous Post Next Post