உலக செய்திகள்
- சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து தான் ஆய்வை வெற்றிகரமாக செய்ய முடிந்தது.
- ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் பகுதி நேர உறுப்பினராக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தேசிய செய்திகள்
- ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கான பணியிடத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க பாலாறு மற்றும் பெண்ணையாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதயநோய் இருப்பதை உறுதி செய்வதற்கான துல்லியமான அளவீடுகளை முதன் முறையாக இந்திய மருத்துவ வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- தட்பவெப்பநிலைக்கேற்ப ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் பிரத்யேக உடையை புதுச்சேரியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி தேவசேனா வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார்.
- சூரியனின் கொரோனோ சுற்று வட்டத்தை ஆய்வு செய்வதற்கான பார்கர் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலமானது டெல்டா 4 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கெனவெரலில் இருந்து ஏவப்பட்டது. சூரியனின் மேற்பரப்பைக் காட்டிலும் கொரோனா எனப்படும் சுற்று வட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது தற்போது வரை புதிராகவே உள்ளது. இது குறித்து பார்கர் விண்கலம் ஆராய்ந்து தகவல்களை அளிக்கவுள்ளது.
வர்த்தக செய்திகள்
- நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.4,875.75 கோடி நஷ்டம் அடைந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இரங்கல்
- இலக்கியத்துக்காக நோபால் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் (வயது 85) லண்டனில் காலமானார்.