உலக செய்திகள்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது . அதில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
- Travel + Leisure யின் படி உலகின் 15 சிறந்த நகரங்களில் பட்டியலில் உதய்பூரின் பாரம்பரிய நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பட்டியலில் முதல் இரண்டு நகரங்கள் மெக்ஸிகோவின் சான் மிஜுவல் டி அலெண்டே மற்றும் ஓக்ஸாகா ஆகியவை ஆகும் .
- ஐ.நா மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதை அடுத்து அதன் பணியை தொடர்வதற்காக ஐஸ்லாந்தினை N General Assembly தேர்வு செய்துள்ளது.
இந்திய செய்திகள்
- சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் ஆன்லைன் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பு (Online Pension Management System (OPMS)) மூலம் bhar Aapki Sewa Ka app ஐ அறிவித்தார்.
- அதிநவீன பால் பதனிடும் தொழிற்சாலை தமிழக அரசு சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில்
- திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- மும்பையில் உள்ள மேற்கு இரயில்வேயின் கீழ் வரும் எல்பின்ஸ்டன் ரோடு இரயில் நிலையத்தின் (Elphinstone Rood station) பெயர் ‘பிரபாதேவி இரயில் நிலையம்’ (Prabhadevi station)என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
- ‘கிஷான் மேலா-கூட்டம்’ – SBI வங்கியானது கர்நாடகா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுடன் அவர்களது விவசாய கடனை தீர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ‘கிஷான் மேலா’ என்ற பெயரில் புதிதாக தொடங்கியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- 2018 ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 1 வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதுள்ளது. women’s 68 Kg பிரிவில் திவ்யா ககரான் வெள்ளி வென்றார்.ரீனா women’s 55 Kg பிரிவிலும் மற்றும் கருணா women’s 76 kg பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் .
- பிரபலமான டென்னிஸ் வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்று வருகின்றன.மகளிர் இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலனா சுகோவாவின் (53) பெயரும் ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. அவர் 9 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவிலும், 5 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டங்களை வென்றுள்ளார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் நடுவராக பங்கேற்கும் மிகவும் இளம் வயது (23வயது) இந்திய நடுவர் என்ற பெருமையை ‘சகார் காஷ்யப்’(Sagar Kashyap) பெற்றுள்ளார்.
- செக் குடியரசின் மில்சேன் நகரில் நடைபெற்ற 28வது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கல பதக்கத்துடன் சாதனை படைத்துள்ளது. மேலும் இந்தப் போட்டியில் இந்தியாவின் மனுபாக்கர் 4 தங்கம் பெற்றுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் இருந்து ‘ப்ளு ஆரிஜின்’ என்னும் இராக்கெட், விண்வெளிக்கு சுற்றுலா செல்வதற்காக அமேசான் நிறுவனத்தால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இரங்கல்
- புகழ்பெற்ற கவிஞரான கோபால் டஸ் நீராஜ் டெல்லியில் காலமானார்
முக்கிய தினங்கள்
- ஜுலை 18 - சர்வதேச மண்டேலா தினம்