RRB Tamil Current Affairs 2nd July 2018

உலக செய்திகள்
  1. ஃபிரான்சில் 12 வயது சிறுவன் டாம் கோரோன் தனிப்படகில் அய்ல் ஆஃப் வைட் (Isle of Wight) என்ற பகுதிக்கு கடற்பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
  2. மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடார் வெற்றிபெற்றார்
  3. சீனாவின் பாம்புத் தீவை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. போஹாய் ((Bohai)) கடல் பகுதியில் டாலியன் நகரம் என்ற ((Dalian city)) பாம்புத் தீவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அதிக விஷம் கொண்ட அபூர்வ விரியன் வகைப் பாம்புகள் காணப்படுகின்றன.
  4. சுவிஸ் வங்கியில் அதிக அளவிலான பணத்தை முதலீடு செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா 73வது இடத்தில் உள்ளது.
இந்திய செய்திகள்
  1. பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெறும் திருமணம் ஆகாத மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை பிஹார் அரசு செயல்படுத்தி வருகிறது
  2. இந்தியாவில் 19,500-க்கும் மேற்பட்ட மொழிகள், கிளை மொழிகள் தாய்மொழியாக பேச்சு வழக்கில் உள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
  3. ஜிஎஸ்டி வரி ஓராண்டு நிறைவு விழாவை 400- பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தகவல்
வர்த்தக செய்திகள்
  1. தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடில்  கோயம்புத்தூர் நகரம் 16-வது இடத்திலும், ஈரோடு 51-வது இடத்திலும், சென்னை 100-வது இடத்திலும் உள்ளது
  2. பாதுகாப்பு சாதனங்களான ஏர் பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட் எச்சரிக்கை கருவி உள்ளிட்டவை அனைத்து கார்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  3. வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க தவறியதாக கூறி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அபராதம் விதித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. பாரம்பரியமிக்க வெள்ளை நிற உடையில் விளையாடப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் தொடங்குகிறது.
  2. ICC Hall Of Fame பட்டியலில் ராகுல் டிராவிட் இடம்பெற்றுள்ளார்
  3. ஆஸ்திரியன் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில் பெல்ஜியம் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  4. துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது


Previous Post Next Post