உலக செய்திகள்
- விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ராக்கெட்டை 9-வது முறையாக அமேசான் நிறுவனம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ‘ப்ளூ ஆரிஜின்‘ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸ்
- மாகாணத்தில் இருந்து ஏவப்பட்டது.
- ஸ்கைடிராக்ஸ் என்ற நிறுவனம் 2018-ம் ஆண்டிற்கான சிறந்த விமான நிறுவனத்திற்கான விருதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-க்கு வழங்கியுள்ளது. மேலும் கத்தார் ஏர்வேஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- உலகின் மிகப் பெரிய விமான கண்காட்சி இங்கிலாந்தின் ஃபார்ன்பரோ நகரில் நடைபெற்றது
இந்திய செய்திகள்
- The United States Food & Drug Administration (USFDA) எனும் யு.எஸ் ஹெல்த் ரெகுலரேட்டர், சன் ஃபார்மாசியூட்டிகள் இண்டஸ்ட்ரீஸ் புற்றுநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் INFUGEM இன்சுலேஷனுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.
- பல மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட நில உருவாக்கத்தின் அடுக்குகளைக் குறித்துக் காட்டும், புதை உயிரிப் படிவ அருங்காட்சியகம் அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள வாரணவாசியில் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் முதல் பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம்;(Country’s First Field Still Institute) ஒடிசா மாநிலத்தின் ‘பாரங்க்’(Barang) பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
- வரலாற்று சிறப்புமிக்க தாஜ்மஹாலுக்கு ஏற்படும் மாசுபாடுகள் பற்றி ஆராய மத்திய அரசு ‘சி.கே. மிஷ்ரா’(C.K. Mishra) தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது
- வேலையை சரியாக செய்யாமல் உள்ள 50 வயதிற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ‘கட்டாய ஓய்வு’(compulsory retirement) வழங்கும் முறையை உத்திர பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
- மாநிலத்தின் பசுமை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ‘பௌத்தகிரி இயக்கம் (Paudhagiri campaign)‘ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது
- தேசிய மாணவர் படை (Ncc) மற்றும் தேசிய நாட்டு நலப் பணித்திட்டத்தை (Nss) வலுப்படுத்துவது தொடர்பாக ‘ஸ்ரீ அனில் சுவருப்’(Shri Anil Swarup) தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- அண்டத்தின் காந்தவிசை, அகிலத்தின் பெரும் அளவிலான அமைப்பு, கரும்பொருள் (Dark Matter) மற்றும் நிலையற்ற ரேடியோ ஆதாரங்கள் போன்றவை உள்ள பிரபஞ்சத்தினை ஆராய உதவும் புதிய 64-டிஸ் மீர்காட் எனும் வானொலி(ரேடியோ) தொலைநோக்கியை தென் ஆப்பிரிக்கா உருவாக்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சாட்டிவில் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
- ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் கிரெகோ ரோமன் 77 கிலோ எடை பிரிவில், இந்திய வீரர் சாஜன் தங்கப் பதக்கம் வென்றார்.
- பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு பிரான்சில் நடத்தப்படும். Quadrennial சர்வதேச ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2022 FIFA உலக கோப்பை கத்தாரில் நடைபெற உள்ளது.
- ஜூனியர் மகளிர் ஹாக்கி Under-23 six-nations tournament-இல் இந்திய அணி என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வென்றது .
- பிரேசில் நாட்டின் ‘பிரேசிலா’ நகரில் நடைபெற்ற 7வது உலக ஜுனியர் வுசு சாம்பியன்ஷிப் போட்டியில் (7th World Junior Wushu Championship) இந்தியா 4 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.