உலக செய்திகள்
- அமெரிக்க இராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது
- எவரெஸ்ட் சிகரத்தில் 60கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பெங்களூரை சேர்ந்த தீபா பட் மற்றும் தஹர் மெர்சண்ட் வெற்றி பெற்றுள்ளனர்
- அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்காக தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மாவுக்கு, ஷார்ஜா அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- மும்பை விமான நிலையம் ஒரே நாளில் ஒரே ஓடுதளத்தில் ஆயிரம் விமானங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளார்
- கேரளாவில் விபத்துக்குள்ளானவர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் 48 மணி நேரம் வரை இலவச மருத்துவ உதவி அளிக்கவுள்ளது
- காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக எஸ்.மசூத்(மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவா) நியமிக்கப்பட்டுள்ளார்.
- அசாம் மாநிலத்தை சேர்ந்த அயன் கோகோய் கொஹன் என்ற சிறுவன், தேன் கூடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருக்கு இனம் எழுத்தாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த குருசாமி என்ற பொறியியல் பட்டதாரி செல்போன் மூலம் வாக்களிக்கும் செயலியை கண்டுபிடித்துள்ளார்.
- பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுகளை ஏவுவதற்காக அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு சுமார் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதியை இஸ்ரோவுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
- சென்னையைச் சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேப்பிள் ஸ்டஃப், 2018ம் ஆண்டுக்கான ஆப்பிள் டிசைன் விருதை வென்றுள்ளது.
- ரிசர்வ் வங்கி குறுகிய கடன்களுக்கான ரெப்போ வட்டியை (6 சதவீதத்திலிருந்து)25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரே வருடத்தில் 10 லட்சம் பைக்குகளை விற்று சாதனைப் படைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- அலகாபாத்தில் கங்கை ஆற்றில் 10கி.மீ தூரத்திற்கு பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
- லண்டனின் புகழ் பெற்ற மேடம் துஸ்சாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.கோலம்பூரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் வங்க தேசம் மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில் வங்க தேச அணி வெற்றி பெற்றது.