உலக செய்திகள்
- இந்தியா ஐ.நா அமைதி படைக்கு அனுப்பிய நாடுகளில் மூன்றாவது இடத்திலும் அதில் உயிர் தியாகம் செய்தவர்களில் முதல் இடத்திலும் உள்ளது.
- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக விமானத்தை சிங்கப்பூரில் இருந்து நீயூஜெர்சி வரை இயக்க முடிவு செய்துள்ளது.
- கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
- நீயுஸிலாந்து அரசு பாக்டீரியா நோயை தடுக்க லட்சத்திற்கும் அதிகமான பசுக்களை கொள்ள முடிவு செய்துள்ளது.
- நேபாள பிரதமர் அந்நாட்டு அமைச்சர்கள் 6 மாத காலத்திற்குள் மடிகணினிகளை இயக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கற்றுக்கொள்ளாவிட்டால் பதவி நீக்கம் செய்யபடும் என்றும் தெரிவித்துள்ளது.
- பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அதிக பட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 லட்சம் ரியால்கள் ( இந்திய மதிப்பு 54 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு சட்டம் இயற்றி உள்ளது.
தேசிய செய்திகள்
- கைத்தரி மற்றும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க ஒரிசாவில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி கைத்தறி ஆடைகளை உடுத்தி வர உத்தரவிடப்பட்டுள்ளது.
- மனித வள மேம்பாட்டு துறை பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிய தகுதிவாய்ந்தவர்கள் என அறிவித்துள்ளது.
- விமானப்படை தளபதிகள் மாநாட்டை டெல்லியில் உள்ள வையு சேனா பவனில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்.
- இந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் இணைந்து "சூரிய கிரண்" என்ற கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டுவருகிறது.
விளையாட்டு செய்திகள்
- இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு, போட்டி நடுவர்கள், வீடியோ ஆய்வு நிபுணர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இரண்டு மடங்கு ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
- சர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் 'ஆசிய டிவிஷன் 1' சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி முதன் முறையாக பங்கேற்க உள்ளது.
- இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்.
- இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம்3 சதவீதத்தை தரச்சான்று நிறுவனமான "மூடி'ஸ்" குறைத்துள்ளது.
- ஆர்-கம் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்பிராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிடகாம் போன்றவற்றின் திவால் நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு தீர்பாயம் தடை விதித்துள்ளது.
- சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் மாத காலாண்டு நஷ்டம் ரூ 3,606.73 ஆக அதிகரித்துள்ளது.
- பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் ரூ 79 கோடி இழப்பை அடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.