உலக செய்திகள்
- சூரிய கிரண் XIII – இந்திய நேபாளம் நாடுகளுக்கிடையேயான 13 வது கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோராகார்க் என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வருடத்திற்க்கு இரு முறை நடைபெறும்.
- சர்வதேச அளவிலான தகவல் மற்றும் தொலைதொடர்பு மாநாடு நேபாளத்தின் தலைநகரமான காத்மண்டு-வில் நடைபெற உள்ளது
- 106-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு பஞ்சாபில் உள்ள லவ்லி புரோப்ஸ்னல் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது.
- 104-வது மாநாடு திருப்பதியில் வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
- 105-வது மாநாடு மணிப்பூர் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
- இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் மாகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளது.
- இலக்கிய உலகில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான இயல்விருது இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ஹரியான மாநிலத்தில் அரசு வேலையில் சேர்வதற்கான வயது வரம்பை 40 இல் இருந்து 42 ஆக உயர்த்திவுள்ளது.
- யானைக்கால் நோயை அகற்றுவதற்கான 10வது உலகளாவிய கூட்டம் ((Global Alliance to Eliminate Lymphatic Filariasis (GAELF)) புதுடெல்லியில் நடைபெற்றது.
- குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் குறு> சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையுடன் இணைந்து கைவினைஞர்க்கான Solar Charkha Mission எனும் திட்டத்தை புதுடெல்லியில் தொடங்கியுள்ளார்.
- தமிழக பாரத சாரண சாரணியர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்யபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- இந்திய கடலோர காவல் படையில் சி- 440 (சார்லி -440) என்ற புதிய ரோந்துக் கப்பல் இணைக்கப்பட்டது.
வர்த்தக செய்திகள்
- நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த மே மாதத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
- வோடஃபோன், ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைவதற்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை
- ஒப்புதல் அளிக்க உள்ளது.
- ஜப்பானின் சாஃப்ட் பேங்க் ((Soft Bank)) நிறுவனம் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் ((100 Billion Dollar)) வரை முதலீடு செய்யவுள்ளது
விளையாட்டு செய்திகள்
- இங்கிலாந்தின் கார்டிப் துறைமுகத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கோதன்பெர்க் வரை நடைபெற்ற சர்வதேச பாய்மர படகு போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
- கனடா நாட்டில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தையத்தின் 7-வது கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் செபஸ்டியான் வெட்டல் தனது 50-வது கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
- ஜுன் 14 உலக ரத்ததான தினம், இத்தினம் 2005 முதல் உலக சுகாதார நிறுவனத்தால் கொண்டாடப்பட்டுவருகிறது.