உலக செய்திகள்
- சீனாவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க மீண்டும் ஒரு புதிய கண்ணாடிப் பாலத்தை அந்நாடு கட்டி உள்ளது. ஃபுக்ஸி மலைகளில் ((Fuxi))இரு குன்றுகளுக்கு நடுவே ஏறத்தாழ ஆயிரத்து 180 அடி உயரத்தில் இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் விசா நடைமுறைகளை எளிதாக்க ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- காக்னிசென்ட் (சிடிஎஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரான்ஸிஸ்கோ டிசோசா, இயக்குநர் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்
- இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய செய்திகள்
- விருதுநகர், ராமநாதபுரத்தில் என்.எல்.சி. சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை நிதி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண் திவ்யா சூர்யதேவாரா ((Dhivya Suryadevara)) பதவியேற்கவுள்ளார்.
- வேளாண்துறை சார்பில் 127 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
- பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கிகளின் நம்பகத் தன்மை (VRs) தரத்தினை பிட்ச் நிறுவனம் குறைத்துள்ளது
- மருத்துவ காப்பீடு பாலிசிகளை விநியோகம் செய்வதற்காக மேக்ஸ் பூபா நிறுவனம், கரூர் வைஸ்யா வங்கியுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது
- கடந்த மார்ச் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 9 சதவீதமாக (1,300 கோடி டாலர்) அதிகரித்திருக்கிறது.
விளையாட்டு செய்திகள்
- பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஷிகார் தவான் படைத்துள்ளார்.
- ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவர்களுக்கு உதவும் வகையில் விஏஆர் தொழில் நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட உள்ளது