உலக செய்திகள்
- சீன அரசக்குடும்பம் 18ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய பூச்சாடி ஒன்று, பிரான்சில் 19 மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது.
- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் 06.18 சந்தித்துப் பேசினர். அப்போது வடகொரியாவின் அணுஆயுதங்களை முழுமையாக ஒழிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- சூரிய கிரண் XIII – இந்திய நேபாளம் நாடுகளுக்கிடையேயான 13 வது கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோராகார்க் என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வருடத்திற்க்கு இரு முறை நடைபெறும்.
- சர்வதேச அளவிலான தகவல் மற்றும் தொலைதொடர்பு மாநாடு நேபாளத்தின் தலைநகரமான காத்மண்டு-வில் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
- அடல் புத்தாக்கத்திட்டத்தின் கீழ், ஆய்வகங்களை நிறுவுவதற்காக 3 ஆயிரம் பள்ளிகள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- அடல் பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத் தொகையை மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
- அடல் இனோவேசன் மிஷன் – என்ற திட்டத்தின் கீழ் நிதி ஆயோக்- கானது நாடு முழுவதும் சுமார் 3000 அடல் டிக்கரிங்ஸ் லேப் நிறுவ உள்ளது.
- இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் மாகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளது.
- Data visualization App – யுனிசெப் அமைப்பானது இந்தியாவில் கல்வி சூழ்நிலைகளின் சிக்கலான பகுப்பாய்வுகளை எளிய முறையில் காட்சிப்படுத்தி மக்களுக்கு வழங்குவதற்காக இந்த செயலியை வெளியிட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்க ரூ 1,125 கோடியில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
- இலக்கிய உலகில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான இயல்விருது இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
- 2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் கால்பந்துப் போட்டிகளை நடத்துவதற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
- இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலிக்குச் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
- French Open Tennis போட்டியில் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்
- இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பாக வழங்கும் சிறந்த இந்திய கால்பந்து வீரர் விருது இந்தியாவின் சுனில் செத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது
- கனடா நாட்டில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தையத்தின் 7-வது கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் செபஸ்டியான் வெட்டல் தனது 50-வது கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.