RRB Tamil Current Affairs 8th May 2018

உலக செய்திகள்
  1. ரஷ்யாவின் புதிய அதிபராக நான்காவது முறையாக விளாடிமிர் புதின் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  2. ரஷ்யாவின் புதிய துணை பிரதமராக " அன்ட்டன் சிலுவானாவ்" பொறுப்பேற்றுக் கொண்டார்
  3. அமெரிக்கா ஜெருசலேமில் கட்டியுள்ள இடத்திற்கு 'அமெரிக்க தூதரகம் சாலை ' என இஸ்ரேல் அரசு பெயர் சூட்டியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. உத்திரபிரதேச அரசு மின்சார திருட்டை தடுக்க பிரீப்பெய்டு மீட்டர் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
  2. மத்திய அரசு பெண்கள் வன்கொடுமைகளை தடுக்க 9 சுய உதவி மையங்களை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  3. உத்ரகாண்ட் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 700 கிராமத்திற்கு மேல் வறண்டு இருப்பதாகவும் மொத்தம்89 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  4. ரயில்வே நிர்வாகம் ரயில் பயணங்களில் போது வாங்கும் உணவிற்கு ரசீது வழங்க ரயில்வே மண்டலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  5. காரைக்கால் அம்மையார் புராணத்தின் பின்னணியில் காரைக்காலில் மாம்பழ திருவிழா நடைபெறுகிறது. உலகில் மாம்பழ திருவிழா நடைபெறும் இடம் காரைக்கால் மட்டுமே ஆகும்.
  6. முதன்முறையாக இந்திய துணை குடியரசு தலைவர் ' வெங்கையா நாயுடு ' கவுதலாமா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு நாட்டு உறவை மேம்படுத்த அந்நாட்டு அதிபர் " ஜிம்மி மொலாரசை" சந்தித்து பேசினார்.
வர்த்தக செய்திகள்
  1. 2022 ஆம் ஆண்டிற்குள் இயற்கை எரிவாயு உற்பத்தியை இரட்டிப்பாக மாற்ற மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  2. இந்தியாவின் உருக்கு பொருட்கள் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட7 சதவீதம் அதிகரித்துள்ளது.
  3. ஐசிஐசிஐ வங்கியின் 50 சதவீதம் அளவுக்கு மார்ச் காலாண்டு நிகர லாபம் சரிந்துள்ளது.
  4. முகேஷ் அம்பானியின் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமில் ரூ 60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
  5. எக்ஸைட் பேட்டரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்ச் மாதத்தில் நிறைவடைந்த காலாணாடில் ரூ56 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காது என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
  2. சீனா, தைபே, நீயுஸிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கான இன்ட்கான்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்கு பதிலாக கென்யா பங்கேற்கும் என ஏ.ஐ.எப்.எப் தெரிவித்துள்ளது.
  3. ஐ.பி.எல் போட்டியில் இந்தியாவின் "ராபின் உத்தப்பா" 4000 ரன்களை கடந்த 6ஆவது வீரர் ஆனார்
  4. 2018 ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு முதல் இடத்திலும் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதல் இடத்திலும் உள்ளனர்.
  5. 32 ஆவது பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து போட்டி சித்தூரில் நடைபெற்றது. இதில் இந்தியன் ஐஓபி அணி ஆண்கள் பிரிவிலும் கேரள அணி மகளிர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
  6. ஆர்செனல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் 22 ஆண்டுகளாக பணியாற்றிய " ஆர்சென் வெங்கர்" ஞாயிற்றுக் கிழமை தனது பணியை நிறைவு செய்தார்.
Previous Post Next Post