உலக செய்திகள்
- மலேசியாவில் ஜி.எஸ்.டி.க்கு மாற்றாக எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி ஜூன் ஒன்று முதல் அமலாகிறது.
- ரஷ்யா மற்றும் கிரீமியா நாடுகளை இணைக்கும் புதிய பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் திறந்து வைத்தார்
தேசிய செய்திகள்
- மூன்று லட்சத்துக்கு குறைவாக வாழும் நகராட்சிகளின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது
- 10 லட்சத்துக்கு அதிகமாக மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களின் பட்டியலில் விஜயவாடா முதலிடத்தில் உள்ளது
- தூய்மை நகரங்களின் பட்டியலில் மைசூர் முதலிடத்தை பெற்றுள்ளது
- உலகின் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி இருப்பதாக ஐ.நா அறிவித்துள்ளது
- இராணுவ தகவல் தொடர்புக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ஸ்பெக்ட்ரம் நெட்ஒர்க் திட்டத்திற்கு ரூ 11,330 கோடி வழங்கப்பட்டுள்ளது
- நாட்டிலேயே தூய்மையான நகரங்களாக இந்தூர், போபால், சண்டிகர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டார்.
வர்த்தக செய்திகள்
- தர மதிப்பீட்டு நிறுவனமான கேர்(CARE) ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 20வங்கிகளின் வராக்கடன் 32% அதிகரித்து ரூ.3.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
- நாட்டின் ஆயுதப்படை ஏற்றுமதி வர்த்தகம்40% சரிந்துள்ளது
- எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 கி.மீக்கு ஒரு சார்ஜ் மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
- இங்கிலாந்து கால்பந்து பயிற்சியாளர் சங்கத்தின் 26வது விருந்து வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் ஐஎஸ்எல் கால்பந்து கோப்பையை வென்ற சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரிக்கு விருது வழங்கப்பட்டது
- ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் நடக்கும் கிளப் போட்டியில் விளையாடுகிறார்.
முக்கிய தினங்கள்
- மே 17 - உலக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தினம்
இரங்கல்
- பிரபல ஆங்கில எழுத்தாளர் டாம் உல்ப் (Tom Wolfe) காலமானார்.