உலக செய்திகள்
- மத்திய இலங்கையில் சுமார் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப்பணிகளை மேற்கொள்வதற்கான கடன் வழங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
- கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கிளான்ஸ்மேன் எனும் நுண்ணுயிரியல் துறை ஆய்வாளர் தலைமையிலான குழு ஒரு நத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிப் பொருத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது
- உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஆஸ்திரேலியே வீரர் ஸ்டிவ் பிலைன் ( steve plain ) குறைந்த நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.
- பாகிஸ்தானில் பார்வை குறைபாடு உடைய யூசப் சலீம் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று பாகிஸ்தானின் முதல் பார்வை குறைபாடுடைய நீதிபதியானர்
- வடகொரியாவில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை காரணமாக மேன்டேப் என்ற மலை4 அடி நகர்ந்தும் 1.6 அடி பூமிக்குள் புதைந்தும் உள்ளது
தேசிய செய்திகள்
- பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை 15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர் ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு விளம்பரத்திற்காக மட்டும் 4343 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது
- கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5வருட ஆட்சியை முழுமையாக பூர்த்திசெய்யும் முதலமைச்சர் என்ற பெருமையை சித்தராமையா பெற்றார்
- மத்திய அரசு வறட்சி மற்றும் வெள்ளம் உள்ளிட்டவற்றால் பாதிப்படைந்த 4மாநிலங்களுக்கும் 1யூனியன் பிரதேசத்திற்கும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,161 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது
- சுற்றுசூழல் மற்றும் வனத்துறையில் பசுமை திறன் மேம்பாட்டு திட்டதின் கீழ்5 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
வர்த்தக செய்திகள்
- நாட்டின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில்85 சதவீதமாக உயர்ந்துள்ளது
நியமனங்கள்
- இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதலாக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றார்
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக எஸ்.எஸ்.அலுவாலியா நியமிக்கப்பட்டார்
விளையாட்டு செய்திகள்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சிவெரேவ் (Zverev) சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஸ்பானிஷ் கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.
- ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சிந்து தங்கம் வென்றார்
- ஆசிய கேடட் மற்றும் ஜீனியர் ஜூடோ சாம்பியன் போட்டியில் இந்திய அணி 3தங்கம் உள்பட 9பாதகங்களை வென்றுள்ளது
- ஸ்விட்சர்லண்ட் வீரர் ரோஜர் பெடரர் உலக டென்னிஸ் சமேளனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்
- மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரெகானேவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிகப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னை பல்கலைக்கழக அணியும் பெண்கள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகமும் சாம்பியன் பட்டம் வென்றனர்