உலக செய்திகள்
- பிரிட்டனை சேர்ந்த பார்க்ளேஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் ஜெஸ் ஸ்டேலிக்கு 5கோடியே 87 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலகிலேயே மூத்த பிரதமர் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளார்
- மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முகமது மலேசியாவில் GST வரியை ரத்து செய்துள்ளார்
- உலகிலேயே ஒரே கல்லால் ஆனா உயரமான சிலை என்ற அந்தஸ்தை கர்நாடக மாநிலத்தில் சரவணபெலகோலோ என்ற இடத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை பெற்றது
- மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சட்ட கல்லூரி மாணவன் பிரபாகரன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை பெற்றார்
தேசிய செய்திகள்
- நேபாளத்தின் ஜனக்பூர் - இந்தியாவின் அயோத்தி இடையே பேருந்துப் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடியும் நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒலியும் தொடங்கி வைத்தனர்.
- மகாராஷ்டிராவில் உள்ள அஹமதாபாத் சிறையில் முதல் முறையாக கைதிகளால் இயக்கப்படும் ரேடியோ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
- குஜராத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 740 பேர் துடைப்பானுடம் நடனமாடி சாதனை படைத்துள்ளார்
- வை-பை இணைப்பு மூலம் விமானத்தில் இணைய சேவை வழங்க புதிய வரையறைகளை தொலைதொடர்பு துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் முடிவுசெய்துள்ளார்
- தெலுங்கானா அமைச்சர் சந்திரசேகர ராவ் உழவர்களுக்காக RYTHU BANDHU என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 1ஏக்கருக்கு ரூ.8,000 நிதிஉதவி அளிக்கவுள்ளது
வர்த்தக செய்திகள்
- நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியில் ஒருவரே பதவி வகிக்க கூடாது என்று பங்கு சந்தை கட்டுப்பட்டு அமைப்பான செபி தெரிவித்துள்ளது
- உலக புகழ்வாய்ந்த தேடல் பொறியான கூகுளின் ஜிமெயில் மின்னசல் சேவையில் செய்திகள் மட்டுமல்லாமல் பணபரிவர்த்தனை சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது
- நாடுமுழுவதும் உள்ள மாணவர்களுக்காக ஜியோ டிஜிட்டல் சாம்பியன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான 3 வது சர்வதேச கால்பந்து போட்டி ரஷ்யாவின் மாஸ்கோவில் துவங்கியது.
- உலக கோப்பாய் கால்பந்து போட்டியின் துணை நடுவராக இந்தியாவை சேர்ந்த யுவேனா பெர்ணான்டஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- இத்தாலி கால்பந்து போட்டியில் 13வது முறையாக ஜீவென்டஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது
இரங்கல்
- ஆஸ்திரேலியவின் தாவரவியல், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானியான டேவிட் குடால் தமது 104-வது வயதில் சட்டப்படி உயிரை மாய்த்துக் கொண்டார்
முக்கிய தினங்கள்
- மே-11 தேசிய தொழில்நுட்ப தினம்