உலக செய்திகள்
- அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல்லை நியமிக்க அமெரிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- காங்கோவில், எபோலா நோய் வேகமாக பரவி வருவதை அடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
- நேபாள நாட்டைச் சேர்ந்த கமி ரீடா ஷெர்பா 48 வயதிற்குள் 22 முறை எவெரெஸ்ட் சிகரத்தை ஏறி எவெரெஸ்ட் சிகரத்தை அதிகமுறை ஏறியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்
- ஹவாய் தீவில் உள்ள கிலாய் எரிமலை வெடித்துள்ளது
தேசிய செய்திகள்
- உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் செல்போனில் பேசிகொண்டே வாகனம் ஓட்டுவது குற்றமல்ல என கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
- இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமான தாங்கி கப்பலுக்கு நடுக்கடலில் எரிபொருள் கொண்டுச் செல்லும் படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
- மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி பி சிங் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் உயர்மட்ட அளவிலான சந்திப்பில் கலந்துகொள்ளும் அமைச்சர் அவர்
வர்த்தக செய்திகள்
- ப்ராஜெக்ட் மேவன் என்ற நிறுவனம் ஓட்டுனரின்றி இயங்கும் பறக்கும் ட்ரோன்களை உருவாக்கி அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கவுள்ளது
- அறிவியல் மற்றும் தொழிநுட்பம்
- நாசா நிறுவனம் மார்ஸ் காப்டர் என்ற ஹெலிகாபட்டரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ளது
- கூகுள் நிறுவனம் ஆன்லைனில் ஜிமெயிலை பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
- மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் கருவியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஆசிய பேட்மிட்டன் கூட்டமைப்பின் துணை தலைவராக இந்தியாவின் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- லியானில் நடைபெற்ற யுரோப்பா லீக் கால்பந்துப்போட்டியில் அதெலட்டிக்கோ மார்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது
- 2018 கால்பந்து கோப்பை மஸ்கொவில் நடைபெற்றுள்ளது
முக்கிய தினங்கள்
- மே 18 - சர்வதேச அருங்காட்சியக தினம்