TNPSC Tamil Current Affairs 5th April 2018

உலக செய்திகள்
  1. 'மெய்நிகர் ஐடி' என்ற பீட்டா பதிப்பை UIDAI வெளிப்படுத்தியுள்ளது, இதன் மூலம் ஆதார் எண்ணிற்கு நிகரான எண்ணை உருவாக்கியுள்ளது
  2. ஹிமாச்சல பிரதேச சுகாதார அமைச்சர் வி.பி.பர்மார் தாய்ப்பால் ஊட்ட முறையை ஊக்குவிப்பதற்கான நோக்கத்துடன் MAA திட்டத்தைத் தொடங்கினார்.
  3. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் டெய்யிப் எர்டோகன் ஆகியோர் துருக்கியின் முதல் அணுக்கரு ஆலை அக்யுயுவில் மத்தியதரைக் கடற்பகுதியில் கட்டுமானத்தைத் தொடங்கினர்.
  4. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 139 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
  5. மும்பை மாநகராட்சியில், முதன் முறையாக ரூ.5,150 கோடி சொத்து வரி வசூல்
தேசிய செய்திகள்
  1. ரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது
  2. தெற்கு ரயில்வே, 2017-2018ஆம் நிதியாண்டில், 7 ஆயிரத்து 670 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறது.
  3. பிட்காயின் எனப் படும் மெய்நிகர் நாணயப் பரிமாற்ற சேவையை எந்த வங்கிகளும் அளிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
  4. கச்சா உருக்கு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தை இந்தியா பெற்றுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.2.41 லட்சம் கோடி வாராக்கடன்கள், வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன
  2. கடந்த ஓர் ஆண்டில் புதிதாக 32 லட்சம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள்
  3. ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மின் வழி ரசீது (இ-வே பில்) முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் 17 லட்சம் இ-வே பில்கள் உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன
விளையாட்டு செய்திகள்
  1. இருபத்தோராவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது இதில் 56 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் குருராஜா இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மலேஷியாவின் முகமது இஷார் அகமது தங்கப் பதக்கம் வென்றார்.
  2. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் பளு தூக்கும் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த சானு சைக்கோம் மீராபாய் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.
  3. இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ஏ செஞ்சுரி இஸ் நாட் எனஃப் என்னும் பெயரில் தன் வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post