உலக செய்திகள்
- அவசர காலங்களில் ரத்தத்தை கொண்டு செல்ல மணிக்கு 127 கி.மீ. வேகத்தில் பறந்து சென்று சேவை வழங்கும் டிரோன்கள்
- இத்தாலி நாட்டில் ஒரே நேரத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளது
- இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது
- கொல்கத்தாவில் இருந்து வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக புதிய கண்டெய்னர் சரக்கு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.
- சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.
- நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லுரியாக சென்னை ஐஐடி யும் பல்கலை பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ்சி யும் நிர்வாக பாடப்பிரிவில் அஹமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகியவை தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்
- பெங்களூரு மாநிலத்தில் குப்பை, கழிவுகளை அகற்றுவதை கண்காணிக்க ஜிபிஎஸ் அமைக்கப்பட்டுள்ளது
- குஜராத் மாநில வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக அஹமது பட்டேலை அம்மாநில அரசு நியமித்துள்ளது
- இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- பேடிஎம் மால் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் மற்றும் அலிபாபா ஆகிய நிறுவனங்கள் ரூ.2,900 கோடியை முதலீடு செய்திருக்கின்றன
- சென்னையைச் சேர்ந்த டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (டாஃபே) நிறுவனம் செர்பியாவைச் சேர்ந்த ஐஎம்டி டிராக்டர் நிறுவன பிராண்டை வாங்கியுள்ளது.
- கடந்த 3 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
- சர்வதேச அளவிலான செல்போன் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது இந்திரபிரஸ்தா என்ற சமையல் எரிவாயு நிறுவனம்5 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது
- ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய பேட்மிட்டன் சங்க தலைவராக ஹிமந்த் பிஸ்வா தேர்வு செய்யப்பட்டார்
- பொருளாளராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் உள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் ஸ்டிவன் ஸ்மித் முதலிடத்திலும் விராட்க்ஹோகிலி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்
- இந்திய அணியின் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பிற்கான உரிமம் 4,442 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது
- விண்வெளியில் தேங்கி இருக்கும் சுமார் 7,500 டன் குப்பைகளை நீக்க இங்கிலாந்து செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது