உலக செய்திகள்
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள தீவிரவாதிகள் பட்டியலில் 139 பாகிஸ்தானியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
- ஸ்காட்லாந்து அருகில் உள்ள ஸ்கை தீவுக் கூட்டத்தில் டைனோசர் ஒன்றின் மிகப்பெரிய காலடித்தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தேசிய செய்திகள்
- 2017-18ம் நிதியாண்டில் 4 ஆயிரத்து 405 கிலோ மீட்டர் தூரத்திற்கான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
- 2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 9 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், வருமான வரி செலுத்தியோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், மத்திய நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
- திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் ஆந்திராவில் இரு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
- இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது
- நாட்டுப்புறத் துறையில் சாதனை படைத்த விஜயலஷ்மிக்கு பத்ம விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
வர்த்தக செய்திகள்
- ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயலாளராக ஷிகா சர்மா மறு நியமனம் செய்யப்பட்டார்
விளையாட்டு செய்திகள்
- டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
- மியாமி ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னர் பட்டம் வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக தேப்ஜனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்