உலக செய்திகள்
- மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மலேசிய அரசு 100 கோடி ரிங்கெட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது
- கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்த ராசாத்தி நேர்த்தியாக விவசாயம் செய்து, மத்திய அரசின் முன்னோடி விவசாயி என்ற விருதைப் பெற்றுள்ளார்
- ஓராண்டில் 2,503 ரயில் பெட்டிகள் தயாரித்து சென்னை ICF ரயில் பெட்டித் தொழிற்சாலை சாதனை
- தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் 2,750 கோடி ரூபாய் வரை விற்பனை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- கேரளா மாநிலத்தில் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது
- தெலுங்கானாவில் உள்ள 17,000 ரேஷன் கடைகளில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
- முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் பட்டம் வென்றுள்ளார்.
- 72-வது சந்தோஷ் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால் அணியை வீழித்தி கேரளா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு 2017ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் மோஸ்ட் என்கேஜ்ட் அக்கவுண்ட் என்ற விருது வழங்கப்பட்டது
- பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) தனது சுத்திகரிப்புத் திறனை இரட்டிப்பாக ரூ.1.40 லட்சம் கோடி முதலீடு
- 2017-2018 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக ரூ.56கோடி வரியை வசூல் செய்தது வருமான வரித்துறை சாதனை படைத்துள்ளது
- ரயில்வே டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 5சதவீதம் தள்ளுபடி செய்யும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது
- இந்திய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கான இணைய வேகம் குறித்த ஆய்வில் 4ஜி பதிவேற்ற வேகத்தில் ஐடியா நெட்ஒர்க்9MBPS வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது
- ஜிஎஸ்எல்வி எப்08 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட GSAT-6A செயற்கைக்கோளின் புவிக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- இந்தியக் கிரிக்கெட் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) ஊழல் தடுப்புப் பிரிவிற்கான புதிய தலைவராக ராஜஸ்தானின் முன்னாள் டிஜிபியான அஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்