உலக செய்திகள்
- உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விடக் கடன் மதிப்பு 225விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலை ஏற்படும் எனப் பன்னாட்டுப் பண நிதியம் எச்சரித்துள்ளது.
- பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசிக்கும் 104 வயதான மூதாட்டி கோலெட் மேசின் பியானோவில் நளினமாய் இசைகின்றார்
- மெக்சிக்கோ நாட்டில் புகைப்பிடிக்கும் விழா கோலகலமாக நடைபெற்றது.
- மாநில அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு, 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
- நிதி மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் விவரம் சரிபார்ப்புக்கு இனி ஆதார் கட்டாயம் என தெரிவித்துள்ளது
- குஜராத் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் சொத்தைத் துறந்து 24 வயது இளைஞர் மோகேஷ் சேத் ((Mokshesh Sheth)) ஜைன துறவியாகியிருக்கிறார்.
- சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்
- தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- கூட்டுச் சேர்ந்து கொண்டு பேட்டரி செல் விலையைத் தீர்மானித்த குற்றச்சாட்டில் எவரெடி, நிப்போ நிறுவனங்களுக்கு மொத்தம் 213கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- சந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனம் என்னும் இலக்கை டிசிஎஸ் நெருங்கி வருகிறது.
- முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம்5 சதவீதம் உயர்ந்து ரூ.6,904 கோடியாக இருக்கிறது
- சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மணிகா.
- காமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஹர்மீத் தேசாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்க இந்திய டேபிள் டென்னிஸ் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
- 28 வயதே நிரம்பிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான பிரபல இசைப்பாடகரான அவிக்கி (Avicci) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.