உலக செய்திகள்
- சவுதி அரேபியாவுக்கு எட்டாயிரத்து 448 கோடி ரூபாய் (130 கோடி டாலர்) மதிப்பிலான பீரங்கிகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
- பால்டிக் கடல் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் போர் ஒத்திகை.
- சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏப்ரல் 18ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட தொடங்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
- உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்து ஏமன் நாட்டிற்கு 87 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
- இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.
- போக்குவரத்து நெரிசல் காரணமாக ஹைதராபாத் நகருக்குள் தனியார் பஸ்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
- உலக வங்கியின் உதவியோடு, உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்த மத்திய அரசு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட உள்ளது.
- ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் ஆகியவற்றுக்கு 5விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.
- கிரிப்டோ கரன்சிக்கள் எனப்படும் மெய்நிகர் பணங்களை கையாளுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் 50 லட்சம் இந்தியர்களின் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
- நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம்4 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது
- நேரடி மானிய திட்டத்தின் மூலம் 83 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கொள்கைக் குழு தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்
- இலங்கை நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ரூ.4,312 கோடி இந்தியா கடன் அளித்துள்ளதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்
- இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது
- ஆன்லைன் பயணப் போர்டல் தளமான Makemytrip இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்(Flipkart) உடன் இணைந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா காயம் காரணமாக விலகியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபடா முதல் இடத்தில் இருப்பவர். 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி, இவரை ஏலம் எடுத்திருந்தது.
- ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளுதூக்குதல் போட்டியினல் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.
- ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்
- ஆஸ்திரேலியாவில் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளது
- ஆஸ்ட்ரேலியாவில் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதலில் 69 கிலோ எடை பிரிவில் தீபக் லாதர் மூன்றாம் இடம்பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் விண்வெளி ஓட சோதனையை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான Virgin Galatic வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- விண்வெளியில் நொடிக்கு 1000 புகைப்படங்களை எடுக்கும் சைபர் கேமராவை இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் விக் தில்லோன் தலைமையிலான ஷெப்பீல்ட் பல்கலைக்கழக குழு கண்டுபிடித்துள்ளது
- பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் இருக்கும் இக்கார்ஸ் என்ற நீலநிற நட்சத்திரம் ஒன்றை தி ஹப்பிள் ஸ்பெஸ் டெலஸ்கோப் என்ற தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது
இரங்கல்
- மலையாள நடிகர் கொல்லம் அஜீத் காலமானார்