உலக செய்திகள்
- சுமார் 205 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினமான இக்தியோசார் (Ichthyosaur) இங்கிலாந்தைச் சேர்ந்த பால் டி ல சால் (Paul de la Salle) என்பவரால் லில்ஸ்டாக் கடற்கரைப் பகுதியில் படிமங்களாக கண்டறியப்பட்டுள்ளது
- கோவாவை சேர்ந்தவர் சிட்னி லிமோஸ்க்கு துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் ரூ1300 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த புகாருக்கு ஆளானதால் அந்நாட்டு நீதிமன்றம் 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
- இந்தியா-ஜாம்பியா இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நீதித்துறை ஒத்துழைப்பு, அதிகாரிகள் மற்றும் தூதர அதிகாரிகளுக்கு பரஸ்பர விசா சலுகை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் கையெழுத்தானது.
- உலகில் ஒவ்வொரு வருடமும் தொற்றில்லா நோய்களால் 4 கோடி பேர் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
- தென் மாநிலங்களுக்கான நிதி அமைச்சர்கள் மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தப்புறத்தில் நடைபெற்றது
- மத்திய பாதுகாப்புப் துறை சார்பில் இராணுவ கண்காட்சி டெக் எக்ஸ்போ 2018 சென்னையில் நடைபெற்றது
- நடப்பு நிதி ஆண்டில் சராசரி சம்பள உயர்வு6 சதவீதமாக இருக்கும் என கேபிஎம்ஜி நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறது
- இந்தியா, ஸ்வாசிலாந்து நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு 1கோடி டாலர்கள் நிதிஉதவி அளித்துள்ளது
- ஜிஎஸ்டி வரிவிதிப்பு வங்கிகள் சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2018 - 2019 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி3% ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது
- அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு5 சதவீதமாக அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- ஜிஎஸ்டி வரிக்குட்பட்ட பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இணையவழி பில் ஏப்ரல் 15ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
- நடப்பு நிதியாண்டில் நாஸ்காம் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்
- ஆப்பிள் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையில் 100% மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது
- நாட்டில் விரிவாக்க திட்டங்ககளுக்காக ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனம் மற்றும் அண்ட் ஸ்கூட்டர் நிறுவனம் ரூ.800 கோடி முதலீடு செய்துள்ளது
- போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் IRNSS-1i செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஸ்ரேயாசி சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 50மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஓம் பிரகாஸ் மிதார்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஆண்கள் டபுள் டிராப் பிரிவில் அங்குர் மிட்டல் வெண்கலப் பதக்கம் பெற்றார்.