உலக செய்திகள்
- மெக்ஸிகோவில் எதிர்காலக் காடு எனப் பொருள் படும் ‘ஃபியூட்சர் ஃபாரெஸ்ட்’ (Future Forest ) என்ற தலைப்பில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
- டேமியன் கிரேனோசிக் (Damian Granosik) எனும் கலைஞர் சிறந்த கட்டமைப்புக்கான கட்டிடத்தை வடிவமைக்கும் போட்டியில் மடக்கிய நிலையில் இடம் பெயர்த்தக் கூடிய கட்டிடத்தை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளார்.
- சீனக் கடற்படையின் லியானிங் கப்பலில் இருந்து ஜே 15வகைப் போர்விமானங்கள் தைவான் அருகே பசிபிக் கடற்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
- அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு மனச்சோர்வு அதிகளவு ஏற்படுவதாக சான்ப்ரான்சிஸ்க்கோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் எரிக் பெப்பர் மற்றும் இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி ஆகியோர் தெரிவித்துள்ளார்
- விமான நிலைய தீயணைப்பு பணிக்கு முதன்முறையாக கொல்கத்தாவைச் சேர்ந்த ((Taniya Sanyal)) தனியா சன்யால் என்ற இளம்பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகளில், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகை இருப்பதாக தெரியவந்துள்ளது.
- வரும் கல்வியாண்டில், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.டெக் மற்றும் எம்.டெக் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) திட்டமிட்டுள்ளது.
- உலகத்தின் மொத்த கடன் தொகை 164 லட்சம் கோடி டாலரை தொட்டுள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது
- இந்தியன் ஓவர்சிஸ் வங்கி தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசின் தேசிய ஆளுமை சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
- குழந்தை கருவில் உள்ளபோதே டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் குணங்களை மாற்றமுடியும் என்று கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி கண்டுபிடித்துள்ளார்
- சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவராக ஒலிம்பியான் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- ஏப்ரல் 22- உலக பூமி தினம்
- ஜப்பானைச் சேர்ந்த உலகின் வயதான பெண்மணி நபி தஜிமா, தமது 117ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.