உலக செய்திகள்
- ஜப்பானைச் சேர்ந்த மசாஜோ நுனாகா (Masazo Nonaka) என்ற 112 வயது முதியவரை, உலகின் வயது முதிர்ந்த மனிதராக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
- சவுதி அரேபியாவின் நிதி நிறுவனமும் ஜப்பானின் சாப்ட்பாங்க் குரூப்வும் இணைந்து ரூ.13லட்சம் கோடியில் உலகிலேயே மிக பெரிய சூரிய மின் திட்டத்தை தொடங்கவுள்ளது
- சுவாசிலாந்து நாட்டில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கு வழங்கப்பட்டது
- மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இராணுவ வீரர்களுக்கு புல்லட் புரூப் ஜாக்கெட் தயாரிக்க எஸ்.எம்.பி.பி. நிறுவனத்துடன் ரூ.639 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
- மத்திய அரசு திருநங்கைகளுக்கான பான் கார்டு விண்ணப்பத்தில் 49ஏ,49ஏஏ என்ற தனிப்பிரிவின் கீழ் அவர்களின் பாலினத்தை குறிப்பிட்ட வழிவகை செய்துள்ளது
- பீகார் மாநிலத்தில் மாதேபுரா பகுதியில் இரயில் பேட்டி தொழிற்சாலையும், கத்திஹார்-டெல்லி இடையேயான புதிய இரயில் சேவையையும் மோடி தொடங்கிவைத்தார்
- 2017-2018ஆம் நிதியாண்டிற்கான பங்கு சாரா பரஸ்பர நிதி திட்டங்களின் முதலீடு ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிலை-2 யூனிட்களை செயல்படுத்த ரிலையன்ஸ் இனப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துடன் ரூ 1,081 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
- வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 முதல் 20 அடிப்படை புள்ளிகள் வரை எச்.டி.எஃப்.சி வங்கி உயர்த்தியுள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம்40 விழுக்காட்டிலிருந்து 8.45 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்ச ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 8.40 விழுக்காட்டிலிருந்து 8.60 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 75 லட்ச ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டிலிருந்து 8.70 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வட்டி விகிதங்களிலிருந்தும் 5 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது
- 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் முதல் நிலை வீரராக சர்வதேச பேட்மின்டன் கழகம் அறிவித்துள்ளது.
- சர்வதேச ரோபோ கால்பந்தாட்ட போட்டிகள் ஈரானில் நடைபெற்றன. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன.இந்தப் போட்டியில் ஈரானின் காஸ்வின் இஸ்லாமிக் ஆஸாத் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.
- தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் 1,500மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் வேதாந்த் வெண்கலம் வென்றார்
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானியான வீணா சகஜ்வாலா உலகிலேயே முதல் முறையாக மைக்ரோ என்ற எலக்ட்ரானிக் கழிவுகளை மதிப்புள்ளதாக மற்றும் தொழிற்சாலையைச் உருவாக்கியுள்ளார்
- மத்திய தேர்வாணையத்தின் புதிய உறுப்பினராக எம்.சத்தியவதி நியமிக்கப்பட்டுள்ளார்