உலக செய்திகள்
- வெனிசுலேவின் பெட்ரோ(PETRO) என்ற மெய்நிகர் நாணயத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது
- நேபாளில் தர்ப்பர்மார்க் நகரில் நடைபெற உள்ள தொழில்நுட்ப கருத்தரங்கில் உலகின் அதிநவீன ரோபோவானா ஷோபியா உரையாற்றுகிறது
- பிரான்ஸ் மெட்ரோ இரயில் சேவை நிறுவனம் 2019 ஆண்டு முதல் 4G இணைய சேவையை இரயில்களில் வழங்க உள்ளது
தேசிய செய்திகள்
- இந்திய தபால் துறை மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது
- முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- செனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் 102ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் தேடுபொறி டூடுள்வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
- அண்ணா பல்கலைக்கலகம் உள்பட தமிழகத்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது
- நாட்டில் 5 ஆயிரம் போலியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்துள்ளது
- விளையாட்டு செய்திகள்
- 8வது உலக அத்லெடிக் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஆனந்தன் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் மற்றும் 400 மீட்டர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதினை அந்நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ பெற்றுக் கொண்டார்
- சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு
- இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது
- இந்திய விளையாட்டு கழகத்தின் மத்திய மண்டல மைய பொறுப்பு இயக்குனராக ராஜேந்திர சிங் பதவியேற்றார்
வர்த்தக செய்திகள்- நிம்பஸ் டேட்டா என்ற அமெரிக்க நிறுவனம் நிம்பஸ் டேட்டா எக்ஸா ட்ரைவ் டிசி 100 என்ற உலகின் மிகப்பெரிய ஹார்டு டிஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது
- சோதனை அடிப்படையில், டீசலை, வீடுகளுக்கே கொண்டுவந்து வழங்கும் முறையை, இந்திய ஆயில் நிறுவனம், புனேவில் தொடங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்- இஸ்ரோவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேனோ கேமராவான ஐ.என்.எஸ்.-1சி-யால் எடுக்கப்பட்ட புவிப்பரப்பின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த சிறிய செயற்கைக்கோளான INS-1Cயால் எடுத்து அனுப்பப்பட்ட புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
முக்கிய தினங்கள்- மார்ச் 21- உலக வன தினம், சர்வதேச இன பாகுபாடு ஒழிப்பு தினம்