உலக செய்திகள்
- உலக மகளிர் நாளையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு விரைவு ரயில் முழுவதும் பெண் பணியாளர்களைக் கொண்டே இயக்கப்பட்டுள்ளது.
- 8 லட்சத்து, 26 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக செல்வந்தர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ((Jeff bezos)) மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 2வது இடத்தில் உள்ளார்
- இரண்டாம் உலகப் போரின் போது கடலுக்குள் மூழ்கிய அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் லெக்ஸிங்டன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- ஷிஃமோஸ்தாவ் எனும் சிறப்பு வாய்ந்த பண்டிகை கோவாவில் கொண்டாடப்பட்டது.
- இந்தியாவின் போர்ப்படை ஒத்துக்கையான குருல்லிங்யை இராணுவம் முடித்துள்ளது
- பஞ்சாப் மற்றும் நந்தன் நில்கனி இணைந்து அனைவருக்கும் e-gov சேவையை வழங்கவுள்ளது
- கர்நாடகாவிற்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட தனிக்கொடிக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூவர்ணங்களில் உருவாக்கப்பட்ட, இந்த கொடியின் நடுவில் கர்நாடக மாநிலத்தின் சின்னம் இடம் பெற்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தல் மெமோரியல் ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாத ஆனந்த சாம்பியன் பட்டம் வென்றார்
- இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான சம்பள உயர்வில் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 3 கோடியும். இதேபோல் ஏ பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு ரூ. 50 லட்சமும், பி பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு ரூ. 30 லட்சமும், சி பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கு ரூ. 10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
- இ -காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், மித்ரா பேஷன் நிறுவனத்தில் ரூ. 414 கோடி முதலீடுசெய்துள்ளது
- பேடிஎம் நிறுவனம் முதலீடு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சொத்து நிர்வாக சேவைகளுக்கு பேடிஎம் மணி என்ற நிறுவனத்தை தொடங்கியள்ளது
வங்கி செய்திகள்
- கள்ளநோட்டுத் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு 40லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மறு சுழற்சி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 50வது செயற்கைக் கோள் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- விண்வெளி ஆய்வு மையமான நாசா 40 லட்சம் மைல் தூரம் வரை செல்லக்கூடிய ‘பார்கர் சோலார் ப்ரோப்’ ((Parker Solar Probe)) விண்கலத்தை வரும் கோடை காலத்தில் விண்ணில் ஏவுகிறது
- மருத்துவ செடிகளின் ஆய்வு மையம் ஹிமாசல் பிரதேஷில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நியமனங்கள்
- நாகலாந்து மாநில முதலமைச்சராக நிபியூ ரியோ பதவியேற்றார்.
- டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- மார்ச்-8 உலக மகளிர் தினம்
- மார்ச் 2வது வார வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினம்