TNPSC Tamil Current Affairs 7th March 2018

உலக செய்திகள்
  1. 2017ஆம் ஆண்டின் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் லக்னோ, இந்தூர், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, புனே விமான நிலையங்கள் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
  2. அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்ல் வின்ஸன் விமானம் தாங்கி கப்பல் வியட்நாம் வந்தடைந்துள்ளது
  3. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 6 பெண்கள் உள்பட 121 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்
தேசிய செய்திகள்
  1. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  2. ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் முதன் முறையாக பெண் ஊழியர்களால் இயங்கக்கூடிய ரயில் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
  3. சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது
  4. ஆந்திர மலைவாழ் மக்களின் மருத்துவ சேவைக்காக பைக் ஆம்புலனஸை அறிமுகப்படுத்தியுள்ளது
  5. தமிழகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பட்டரை பெரும்புதூர் சுங்கவரி சாவடி பெண்களால் செயல்படுத்தப்பட்டது
  6. டெல்லி அரசு பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக அரசு பேருந்துகளில் அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்பும் கருவியை பொறுத்தியுள்ளது
  7. கல்லுரி மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. இந்தியன் வங்கி கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் ஐசிஎப் அணி சாம்பியன் பட்டம் வென்றது
  2. பெட்ஷரேன் கோப்பைக்கான தொடரில் 10,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை சூர்யா தங்கம் வென்றார்
  3. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர் மற்றும் ஒம் பிரகாஷ் மிதுர்வால் ஜோடி தங்கம் வென்றது
வர்த்தக செய்திகள்
  1. பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, முதல் முறையாக மதுவிற்பனையை தொடங்க உள்ளது.
  2. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பில்லியனர்ஸ் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 19வது இடத்தில் உள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. நியூயார்க்கில் உள்ள பிங்கம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உருவத்தில் தந்தையைப் போன்றே இருக்கும் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் வளர்ச்சி அடைவார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
  2. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான 6 டன் எடை கொண்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோளை தனது 50வது பால்கன் 9 வகை ராக்கெடில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியுள்ளது.
  3. ஹார்வார்டு பல்கலை கழக விஞ்ஞானிகள் மனித கண்களை போல செயல்படும் செயற்கை கண்களை வடிவமைத்துள்ளார்
நியமனங்கள்
  1. ஸ்ரீலங்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்
  2. பாக்கிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ரோலண்ட் ஓல்ட்மனஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

Previous Post Next Post