உலக செய்திகள்
- அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்.
- பொறியியல் அற்புதம் என்று அழைக்கப்படும் சீனாவின் கடற்பாலம் பிரான்சில் உள்ள ஈஃபில் கோபுரம் போல் 60 ஈஃபில் கோபுரங்களைக் கட்டுவதற்குத் தேவையான ஸ்டீல் பலத்துடன் திகழும்.
- அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் 2413 காண்டாமிருகங்கள் உள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
- மத்திய பிரதேசத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 இல் இருந்து 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 12% பென்சனுடன் 1கோடி புதிய வேலைவாய்ப்பு திட்டம்
- முதலீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதமாக விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
- சைபர் குற்றச் செயல்களுக்கு 1,020 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறியுள்ளார்
- ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொகை 12 சதவீதத்தை அரசே செலுத்தும் என்றும் அறிவித்துள்ளது
- சர்வதேச வர்த்தக சபையின் (ICC) இந்திய பிரிவு தலைவராக ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்றார்
- அகில இந்திய டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் போல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளார்
- வங்கதேச அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
- ஐபிஎல் தொடரில் ஹைட்ரபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் 2018 யில் நியமிக்கப்பட்டுள்ள முதல் வெளிநாட்டு கேப்டன்
- கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கவல்ல Sarmat ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.
- சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள கோள்கள் குறித்த ஆய்வு செய்ய 'TESS' எனப்படும் புதிய செயற்கைக்கோளை உருவாக்கிய NASA
- மியான்மரின் புதிய அதிபராக தேர்வு வின் மையின்ட் செய்யப்பட்டார்.
- எகிப்து அதிபராக மீண்டும் அல்-சிசி தேந்தெடுக்கப்டட்டர்