உலக செய்திகள்
- உலகில் தேசிய கடன் அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் மற்றும் ஜப்பான் மூன்றாம் இடத்திலும் உள்ளது
தேசிய செய்திகள்
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான 12 விழுக்காடு பங்களிப்பை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- எம்ஐசி எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- சிந்து நதி உள்பட 6 நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்ட சிந்து நதி கமிசனின் 114வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது
- கேரளாவின் பத்தனம் மாவட்டத்தில் குன்னம் தனம் எனும் கிராமம் யோகா கிராமம் என்ற அந்தஸ்த்தைப் பெற்றது
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இரயில் பெட்டிகளான ட்ரெயின் 18ஐ இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
வர்த்தக செய்திகள்
- ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபோர்டிஸ் ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தை மணிப்பால் ஹாஸ்பிடல் நிறுவனம் வாங்கியது
- பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான வரி ரூ.85,174 கோடியாக குறைந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரித்தாக்கல் 69 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
- 30 வயதுக்குள் இருக்கும் ஆசியாவின் முக்கியமான நபர்களை போர்ப்ஸ் பட்டியலிட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் அனுஷ்கா சர்மா இடம்பிடித்திருக்கிறார்
- எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு10 முதல் 0.25% வரை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது
- நேரடி கடன் பத்திர விற்பனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ராணுவத் தகவல் தொடர்புக்காக பயன்படும் GSAT-6A செயற்கைக் கோளைச் சுமந்தபடி, GSLV-F08 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நியமனங்கள்
- மியான்மரின் புதிய அதிபராக ஊவின் மியிந்த(Win Myint) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்