உலக செய்திகள்
- 18 நாடுகள் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் காரணமாக புவியின் அயனிமண்டலத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தற்காலிக துளை உருவாக்கியள்ளது
- ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ருமேனியா, மால்டோவா (Moldova) போன்ற நாடுகளில் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது.
- மலேசிய அரசு போலி செய்திகள் வெளியிடும் ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களுக்கு 10 ஆண்டு சிறை அல்லது 1 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படவுள்ளது
தேசிய செய்திகள்
- தேனி நியூட்ரோ திட்டத்தின் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது
- கூகுள் ப்ளே ஸ்டோரில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆப் டெலீட் செய்யப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
- பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது
- வர்த்தக செய்திகள்
- ஸ்ரீ குரு கோபிநாத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ரூ. 350 நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது
- பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் நெட்வொர்க் விரிவாக்க திட்டங்களில் ரூ. 4,300 கோடியை முதலீடு செய்துள்ளது
- இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் நடப்பு நிதியாண்டில் 25% அதிகரித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்கப் பதக்கம் வென்றார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்
- ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்
- ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 3வது தங்கத்தை வென்றது
- உள்ளூர் வீரரான மர்சோனிஜா ப்ரூனோ ((Marsonija Bruno)) என்பவர் ஸ்லோவோனிஜா ((Slavonija)) என்ற அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுயநினைவை இழுந்து விழுந்து இறந்தார்
- தமிழ்நாடு ஓபன் ஸ்நூக்கர் தொடரில் மயிலாப்பூர் கிளப் அணி வீரர் ஸ்ரீகிருஷ்ணா சாம்பியன் பட்டம் வென்றார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- செவ்வாய் கிரகத்தில் ஏலியன் தலை பதிந்தது போன்ற படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள இந்தப் பெரிய பள்ளத்தை, நாசாவின் மார்ஸ் ஆர்பிட்டர் கேமரா கடந்த 2005ல் படம் பிடித்தது.