உலக செய்திகள்
- அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐ.நா.வுக்கான முன்னாள் தூதர் ஜான் பால்டன் நியமிக்கப்பட்டுள்ளார்
- பிரிட்டன் புதிய நீல நிற பாஸ்போர்டை அச்சடித்துள்ளது
- உலகில் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நாடு ஐஸ்லாந்து ஆகும்
- தென் கொரிய போர்ஸ்ட் Forced shutdown எனும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் கூடுதல் நேரம் வேலை பார்க்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர உள்ளது .
தேசிய செய்திகள்
- நாட்டில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் நகரங்களின் பட்டியலில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குட்டி விமானமான சரஸ் (Saras) சிறிய நகரங்களுக்கிடையேயான பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது
- கேரளா அரசு ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை எம் கேரளா என்ற பெயரில் தொடங்கியுள்ளது
- டெல்லி பட்ஜெடில் ரூ. 53,000 கோடியை பசுமை நிதிநிலைக்கு அறிவித்துள்ளது
- 741 இரயில் நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்.
- பட்டு வளர்ச்சி துறைக்கு "பட்டு தொழில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம்" என புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து வாடிக்கையாளுக்கு "எல்லோ ஆர்மி" என சேமிப்பு கணக்கை ஈக்விடாஸ் சிறு நிதி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- சுந்தரம் பாஸ்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆர்த்தி கிருஷ்ணா நியமிக்கப்பட்டார்.
- 50 ஆயிரத்துக்கு மேல் வாடகை செலுத்துபவர்கள் நிதி ஆண்டின் மொத்த வாடகையில் டீடீஎஸ் ஆக 5 சதவீதத்தினை வருமான வரித்துறையிடம் செலுத்த வேண்டும் என்று டீடீஎஸ் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்தியாவின் பேட்மிண்டன் வீரர் ஹெச். பிரணாப் பேட்மிண்டன் தரவரிசையில் 12 வது இடத்தில் உள்ளார்.
- இந்தியாவின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் பேட்மிண்டன் ஜோடி சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி அணி உலக பேட்மிண்டன் தரவரிசையில் 20 வது இடத்தில் உள்ளது.
- இந்திய கிரிக்கெட் வாரியம் முகமது சமியை " பி" கிரேட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
- நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
முக்கிய தினங்கள்
- மார்ச்- 23 உலக வானிலை ஆராய்ச்சி தினம்