TNPSC Tamil Current Affairs 14th March 2018

உலக செய்திகள்
  1. சூரியப் புயல் இன்று பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், செயற்கைக் கோள் செயல்பாடு, செல்போன் சிக்னல்கள், மின்சாரம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாசா எச்சரித்துள்ளது.
  2. பூமியின் குறுங்கோளைக் கண்டுபிடிக்க நாசா அனுப்பிய ஓஸிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலம், பென்னு என்ற குறுங்கோளின் படங்களை அனுப்பியுள்ளது.
  3. நோபல் பரிசுபெற்ற இந்தியா வின் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கையெழுத்திட்ட புத்தகம் பாஸ்டன் நகரில் சுமார் ரூ.46 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
  4. தரமான நிர்வாகம் அளிக்கும் 23 நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.புனே முதலிடத்தில் உள்ளது
தேசிய செய்திகள்
  1. நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக ஐக்கிய ஜனதாதள எம்.பி.யான மகேந்திர பிரசாத் தனது சொத்து மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளார்.
  2. கறவை மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்திற்கு 148 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
  3. கர்நாடகாவில் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும் பேருந்தில் பயணம் செய்பவர்கள் இனி சீட் பெல்ட் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
  4. டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு கேம்பஸ்களை இணைக்கும் பிங்க் மெட்ரோ வழித்தடம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
வர்த்தக செய்திகள்
  1. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-2019நிதியாண்டில் ஏழு புள்ளி மூன்று விழுக்காடாகவும், 2019-2020நிதியாண்டில் ஏழரை விழுக்காடாகவும் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
  2. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத2 லட்சம் வாங்கிக்கணக்குகளை ரத்து செய்துள்ளது
  3. 2016-2017 ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் ஏர் இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மிக மோசமான நஷ்டத்தை பெற்ற பொதுத் துறை நிறுவனங்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
  4. வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரத்யேக சரக்கு விமான சேவை கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்
விளையாட்டு செய்திகள்
  1. இந்தியா கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா டி 20 போட்டியில் 1452 ரன் குவித்து முன்னாள் கேப்டன் டோனியின் சதனையை முறியடித்துள்ளார்
  2. ஆஸ்திரிலியாவின் கோல்டு கோஸ்டில் 21வது கமான் வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் கேப்டன் ஆக மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
நியமனங்கள்
  1. அமெரிக்காவின் உளவு துறை அமைப்பான சி.ஐ.ஏ வின் இயக்குனராக முதல் முறையாக கினா ஹாஸ்பெக் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்
  2. நேபாள அதிபராக வித்யா தேவி பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
  3. அமெரிக்க உள்துறை அமைச்சராக மைக் பாம்பியோ நியமிக்கப்பட்டுள்ளார்
இரங்கல்
  1. உலக புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.
Previous Post Next Post