உலக செய்திகள்
- உலகில் ஐந்தாவது மிகப்பெரிய வைரம் சுமார் 260 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைரக்கல்லை ஜெம் டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் கண்டெடுத்தது.
- டிஜிட்டல் முறையில் 200 இதழ்களை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தில் ஆப்பிள் கையெழுத்திட்டது.
- பெண்கள் வாழ்வதற்க்கான மிக சிறந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும் ஸ்வீடன் இரண்டாம் இடத்திலும் நார்வே மூன்றாம் இடத்திலும் உள்ளன
- ஜப்பானில் விவசாய நிலங்களை பாதுகாக்க 65cm நீளமும் 50cm அகலமும் கொண்ட ஒரு ஓநாய் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது
தேசிய செய்திகள்
- நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக கருதப்படும் ஜெயாபச்சன் தனது சொத்து மதிப்பு ஆயிரம்கோடி ரூபாய் என அறிவித்துள்ளார்.
- டெல்லியில் நடைபெறும் காசநோய் ஒழிப்பு கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான புதிய செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகரான வி.கே.ஜெயின் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- பழுதடையும் வாய்ப்புடையவை என்று கருதப்படும் என்ஜின்களைக் கொண்ட A320Neo ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இண்டிகோ மற்றும் கோ(Go) ஏர் நிறுவனங்களின் 65 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, செல்போன் சேவை உள்ளிட்டவற்றுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை, காலவரையின்றி நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வைஃபை வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
- பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ, குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.
- சுவீடனை சேர்ந்த ஆய்வு நிறுவனமான Stockholm International Peace Research Institute வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 2013 முதல் 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் ஒட்டுமொத்தமாக நடைபெற்ற ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
- மொரிசியஸ் அரசு இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய உதவும் வகையில் 10 கோடி டாலரை இந்தியாவுக்கு கடனாக வழங்கவுள்ளது
- புதிய வர்த்தக தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 109 நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது
வர்த்தக செய்திகள்
- சீட்டு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான சிட் பண்ட் திருத்த மசோதா- 2018 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட், தனது மென்பொருள் நிறுவனமான, TCS-ன் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தில் இருக்கிறார்.
- ஐ.பி.எல். 2018 போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியாகியுள்ளது.
- மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 2-வது சுற்றில் உலகின் 12-ம் நிலை வீரரான பிரான்சின் லூகாஸ் பவுலியை வீழ்த்தினார்.
- முத்தரப்பு டி20 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை இந்தியா வீழ்த்தி தொடரில் 2வது வெற்றியை ஈட்டியது.
- உலக மல்யுத்த தர வரிசை பட்டியலில் நவ்ஜோத் கவுர் 2வது இடத்தில் உள்ளார் பின்லாந்து விரங்கமாய் பெப்ரா ஒலி முதலிடத்தில் உள்ளார்
- 80 வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சம்பையன்ஷிப் போட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசாவில் நடைபெறவுள்ளது
- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 ஆண்டுகளுக்கான நடுவர்களுக்கான விளம்பரதாரராக பேடிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சீனாவால் கைவிடப்பட்ட விண்வெளி ஆய்வுநிலையமான டியாங்காங்-1, ஏப்ரல் முதல்வாரத்தில் பூமியை நோக்கி விழும் என புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
- ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என பிரான்ஸில் உள்ள சர்வதேச புற்றுநோய் அமைப்பு தெரிவித்துள்ளது