உலக செய்திகள்
- மொரீஷியசின் முதல் பெண் அதிபரான அமீனா குரிப்-ஃபகிம் (Ameenah Gurib-Fakim) பதவி விலகுகிறார்
- உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸே வரும் ஆண்டிலும் முதலிடத்தில் இருப்பார் என ஃபோர்ப்ஸ் கணிப்புக்கள் தெரிவிக்கிறது.
- ராணுவ வீரர்கள் தினத்தன்று, டாங்கிகள் இல்லாமல் வாகன அணிவகுப்பை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
- இங்கிலாந்தில் உள்ள ஸீ லைஃப் என்ற கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35 சதவீத உயிரினங்கள் இறந்து போயின.
- மகாத்மா காந்தி இடது கையால் கையெழுத்திட்ட அரியவகை புகைப்படம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 41, 806 அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
- உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் இணையதள மொழிகளில் ஆங்கிலம் முதலிடத்திலும் தமிழ் இரண்டாம் இடத்திலும் உள்ளது
தேசிய நிகழ்வுகள்
- இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 25 பேர், ஓராண்டு சான்றிதழ் கல்வி மூலம் சீன மொழியைப் பயின்று வருகின்றனர்.
- 32 கோடிப் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா ஃபிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
- 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை பெற பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
- இந்தியா - சீனா எல்லையில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடையும் வீரர்களுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- தமிழகத்தில் மேலும் 25 பொறியியல் கல்லுரிகள் மூடப்படவுள்ளன
- மருத்துவ படிப்பிற்கான 250 இடங்களை அதிகரித்துள்ளது தமிழக அரசு
வர்த்தக செய்திகள்
- ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு எடுத்து செல்வதற்கு இ-வே பில், ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.
- தொழிலுக்கான அனுமதி பெறுதல் மற்றும் தொழிலை நடத்துதல் ஆகியவை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளதாக லங்ஸ்ட்ரோம் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் பங்கஜ் சோப்ரா கூறினார்
- மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 284 கோடி அளவிலான கடனை தள்ளுப்படி செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- மலேசியாவில் நடைபெறும் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தைத் தோற்கடித்து ஐந்தாமிடத்தைப் பிடித்தது.
- உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா 8 பதக்கங்களை வென்றுள்ளது
- தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் 4வது தொடரில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது
நியமனங்கள்
- உலகில் வன்முறை அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது
- கனடாவில் பிரெண்டா லக்கி என்ற பெண் நிரந்தர ஆர்சிஎம்பி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்
- சிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.