உலக செய்திகள்
- ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான அலெக்ஸாண்டர் மிசுர்கின் ((Alexander Misurkin)) மற்றும் ஆண்டன் ஸ்காப்லெரோவ் ((Anton Shkaplerov)) ஆகிய இருவரும் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறி 8 மணி நேரம், 13 நிமிடங்கள் ஸ்பேஸ் வாக் நிகழ்வில் ஈடுபட்டனர். இதன் மூலம் 8 மணிநேரம் 7 நிமிடம் என்ற நாசாவின் முந்தைய ஸ்பேஸ் வாக் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி பயோட்டிக் எனப்படும் நோய்எதிர்ப்பு மாத்திரைகளில் 64 சதவீதம், சுகாதாரத் துறையின் அங்கீகாரம் பெறாதவை என லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சிங்கப்பூர் தனது 4வது அலுவலக மொழியாக தமிழை அறிவித்துள்ளது.
- உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது.
இந்திய செய்திகள்
- போயிங் விமான நிறுவனம் தனது "எஃப்.ஏ - 18 ஹார்நெட்" (F/A-18 Hornet) ரக போர் விமானத்தை இந்திய கடற்படைக்கு விற்பது குறித்து பேச்சு நடத்தி வருகிறது
- உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்த வாரம் தொடங்க உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் சுமார் 50 எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் ((hybrid)) வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
- தகவல் திருடி, அழிக்கும் மால்வேர்களிலிருந்து பயனாளிகளின் தகவல் மற்றும் சாதனத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூகுள் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது
- தமிழகத்தில் மீத்தேன், ஷேல் வாயு போன்ற எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
- அசாமில் ரூ.1950 கோடி செலவில் இரட்டை வர்த்தக மைய கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
- மஹாராஷ்டிராவில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஸ்பெயினில் நடந்த காற்றில் பறக்கும் சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமி வாட்சன் என்ற 12 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் காலாவதியாகியுள்ளது. பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம்tv சனிக்கிழமையோடு காலாவதியாகியுள்ளது.
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
- சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் இளம் சமையல் கலைஞருக்கான பட்டம் மலேசியாவை சேர்ந்த லாய் ஜியோக்கு வழங்கப்பட்டது.இரண்டாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த சூர்யா சேகர ராய் சௌத்ரி உள்ளார்
- இந்திய பேட்மிட்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளி பாதகத்தையும் அமெரிக்காவை சேர்ந்த பெய்வன் சங் தங்க பாதகத்தையும் வென்றனர். ஆண்கள் பிரிவில் சைனாவின் யூகி ஷி சாம்பியன் படம் வென்றார்
- மின்சார வாரியங்களுக்கான கூடை பந்து போட்டியில் கேரளா மின்வாரிய குழு சம்பையன் படத்தை வென்றது
வர்த்தக செய்திகள்
- பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய வால்மார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
- இந்திய சந்தையில் அந்நிய முதலீடு ரூ.22,224 கோடியாக உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon Heavy rocket விண்ணில் ஏவப்படவுள்ளது.
- சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி, முதல் கட்டத்தில் 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
- உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோமியத்தைப் பயன்படுத்தி மருந்துகளை தயாரித்து வருவதாக அரசின் ஆயுர்வேத மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
நியமனம்
- சைப்ரஸ் அதிபராக நிகோஸ் அனஸ்டாசியடெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.