உலக செய்திகள்
- கூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு தனது பிளே ஸ்டோரிலிருந்து 7 லட்சம் ஆப்களை அதிரடியாக நீக்கியுள்ளது.
- அண்டை நாடுகள் உடனான பிரச்னைகளில் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi தெரிவித்துள்ளார்.
- ஆப்பிள் நிறுவன ஐபோன்களின் செயல்திறன் குறைந்த விவகாரத்தில் அமெரிக்க நீதி மற்றும் பாதுகாப்புத்துறை விசாரணை.
- உள்ளூர் செய்திகளை முதலாவதாக பயனாளிக்கு காட்சிப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- மெக்சிகோவில் 2 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான சமாதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
- அமெரிக்காவில் கிரிப்ட்டோ கரன்ஸி பெயரில் ரூ.1 கோடி அளவுக்கு ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவில் மிகப் பெரிய வாடகை கார் செயலி நிறுவனமான ஓலா சர்வதேச சந்தையில் களமிறங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
- 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக இருக்கும் அரசு பதவிகளை ஒழித்துவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- தமிழக தலைமை நீதிபதி மூ. புகழேந்தி எழுதிய வெள்ளை தாண்டவம் என்ற நூல் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான கரஞ்ச்சின் சோதனை ஓட்டம் மும்பையில் உள்ள Mazagon கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
- தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப்டவுன் உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக விரைவில் அறியப்படும் சூழல் உருவாகியுள்ளது.
- உலகின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் முக்கிய மான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் 15 சதவீதம் முதல் 20 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டிருக்கிறது
- எமிரேட்ஸ் விமான நிறுவனம் 1,600 கோடி டாலர் மதிப்பில் 36 ஏர் பஸ் ஏ380 ரக விமானங்களை வாங்கவுள்ளது.
வர்த்தக செய்திகள்
- கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க 6 வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.
- இந்தியாவில் சூரியஒளி மின்னாற்றல் 20ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்து ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
- சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை2 கோடியாக உயர்வு
- உலக ஜனநாயக நாடுகள் பட்டியலில், இந்த ஆண்டு இந்தியா 42-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- டெல்லியில் நேற்று தொடங்கிய கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் நாளிலேயே தங்கம் வென்றார் .
- மெல்பர்ன் மைதானத்தில் உலகக் கோப்பை டி 20 தொடர் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது
- இந்தியன் ஓபன் பாட்மிண்டன் தொடரின் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் ஜெய்ஸ்வால் தகுதி பெற்றுள்ளார்.