உலக செய்திகள்
- நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே, இந்தியா நடத்தும் கூட்டு கடற்பயிற்சியில் பங்கேற்கவில்லை என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
- சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
- இந்தியாவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் பயிற்சி: நேபாள அரசு அறிவித்துள்ளது
இந்திய செய்திகள்
- பிராவிடன்ட் ஃபன்ட் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகள் மற்றும் பரிமாற்றங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முழுமையாக மின்னணு மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பத்தாம் வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நடப்பாண்டு பொதுத் தேர்வில் மொத்த சராசரி 33 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நீட் பொதுநுழைவுத் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
- ஆரோவில் நகரம் உருவான தினமான இன்று, ஏராளமான வெளிநாட்டினர் கூட்டுத் தியானத்தில் ஈடுபட்டனர்.
- எம்.பி.க்களின் மாத அலவன்ஸ் தொகையை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 ஆயிரமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்அளித்தது.
- ரிலையன்ஸின் இந்த சலுகை மூலம், பல கட்டண சேனல்களை (ஹெச்டி சேனல்கள் உட்பட) ஒரு வருடத்துக்கு இலவசமாகப் பார்க்கலாம்.
வர்த்தக செய்திகள்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. நிதியாண்டின் அக்டோபர் - முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கேப்டன் திறமை தீ போல மெல்ல வளர்ந்து வருகிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
- பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷாஜியாப் ஹசன் கானுக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடைவிதித்து அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இந்தியாவுடனான தனது பயிற்சி குறித்தும் தோனி குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
- தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் கோலி தலைமையிலான இந்திய அணியும், டூப் பிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் இணைந்து நிதி உதவி அளித்துள்ளன.
- விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது.