- ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமராக ஆளும் தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மைக்கேல் மைக் கோர்மேக் (Michael Mc Cormack) பதவியேற்கிறார்.
- நிலவில் ஒருகுறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாமல், எல்லா பகுதிகளில் நீர் செறிந்திருப்பதாக, நாசா ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
- முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல், ‘பிகமிங்’ என்ற தமது புத்தகத்தை இந்த ஆண்டு நவம்பரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
- காலநிலை மாற்றம் மற்றும் காடுகளை அழிப்பது தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேஸான் காடுகளை பாதுகாக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
- வங்கிக் கடன்களைக் கட்டாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடு தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- ரயில்வேயில் 90 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- நிலவில் எதிர்காலத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள, குகை போன்ற அமைப்பை ஏற்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானமான ரஷ்டம் 2 வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
- மாநிலங்களிடையே சரக்குப் போக்குவரத்துக்கான மின்னணு வழிச்சீட்டு முறையை ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தலாம் என அமைச்சர்களின் குழு பரிந்துரைத்துள்ளது.
- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தென்கொரியாவில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான நிகழ்வுகளுடன் முடிவடைந்தன.
- அபுதாபியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் வெற்றி பெற்றார்.