- உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலின் அடிப்படையில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
- அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வகை செய்யும் வகையில் கிரீன் கார்டுகளை விண்ணப்பதாரரின் நாட்டின் அடிப்படையில் இல்லாமல் அவரது தகுதியின் அடிப்படையில் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரல் ராமபோஸா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- துபாயில் நடைபெற்ற மாநாட்டில் அரசு துறைகளில் வளர்ந்து வரும் நாடுகளில் சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது ஆதார் அட்டை திட்டத்திற்காக இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது
- இந்திய மருத்துவ கவுன்சில் திறந்த நிலை கல்வி நிறுவனங்களில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என தெரிவித்துள்ளது.
- தலைமை தபால் நிலையங்களில் தனியார் துறையில் வேலை தேடும் நபர்கள் பதிவு செய்ய நேஷனல் கொரியர் சர்வீஸ் என்ற அமைப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- காஷ்மீர் மாநில அரசு தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
- இரயில்வே நிர்வாகம் நவீன சிக்னல்கள் அமைக்க ஐரோப்பிய இரயில்வே கட்டுபாட்டு சாதன அமைப்பை பின்பற்ற போவதாக இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
- உத்தரப்பிரதேச மாநில சட்டபேரவையில் இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசு பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- சென்னையில் மார்ச். 8 முதல் 11 வரை சர்வதேச பொறியியல் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற உள்ளதாக சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு மருத்துவ உபகரணங்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்வது வருவதாக இரசாயனங்கள் மற்றும் உரங்கல் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
- இந்திய கால்பந்து அணி சர்வதேச தரவரிசையில் 102 வது இடத்தில் உள்ளது.
- ஆசிய குத்துச்சண்டைக்காக தேர்வு செய்யும் போட்டியில் இந்தியா 5 தங்கம் 1 வெள்ளி 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
- தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த செய்யது அலி அபுதாபி விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் அல் அய்னில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பிகர் ஸ்கேட்டிங் பிரிவில் ஜெர்மனியை சேர்ந்த அல்ஜோனா சேவ்சென்கா மற்றும் மசோட் புருணா தங்கபதக்கம் வென்றுள்ளனர்.
- 23 வது குளிர்கால ஒலிம்பிக்கில் பைத்லயன் பந்தயத்தில் பெண்கள் தனி நபர் பிரிவில் ஸ்வீடனை சேர்ந்த ஹன்னா ஓபெர்க் தங்க பதக்கம் வென்றார்.
- அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஜோஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- மத்திய அரசு பணிகளில் ஏழாவது சம்பள கமிஷன் அமலாக்கத்தில் துவக்க நிலை ஊழியர்களின் சம்பளம் ரூ 7000 இருந்து ரூ 18000 உயர உள்ளது.
- என்எல்சி நிறுவனம் நிகழ்கால நிதியாண்டில் ரூ 957.78 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.