TNPSC Tamil Current Affairs 15th February 2018

உலக செய்திகள்
  1. இந்தியாவுக்கு வரும் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி நாளை ஐதராபாத் மெக்கா மசூதியில் நடைபெறும் தொழுகையில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. ஹுவேய் ((Huawei)) மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை அமெரிக்க மக்கள் பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
  3. மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள் பட்டியலில் மைக்ரோசாப்டை முந்திய அமேசான் மூன்றாமிடத்தில் உள்ளது. அமேசானின் சந்தை முதல் மதிப்பு எழுபதாயிரத்து 250கோடி டாலராக அதிகரித்துள்ளது.
  4. அமெரிக்க இராணுவத்தின் எப்-22 ராப்டார் என்ற போர் விமானத்தை எதிர்க்க சீனா ஜே-20 என்ற அதிநவீன போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  5. ஜெர்மன் மாசுபாட்டை குறைக்க பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்தி இலவச பேருந்து வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய செய்திகள்
  1. பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக அதிக அளவு நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியா பிரிட்டனை முந்தி ஐந்தாமிடத்தைப் பிடித்துள்ளது.
  2. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைத் தடை செய்யக் கேரள மாநில அரசு வலியுறுத்தியுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
  3. புதுச்சேரி - பெங்களூர் இடையே பயணிகள் விமானப் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
  4. மூத்த குடிமக்களுக்கு பேருந்து கட்டணம் முற்றிலும் இலவசம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
  5. மருத்துவமனைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது
  6. மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்க தொகை ரூ.1000திலிருந்து 1500ஆக உயர்த்தப்பட்டுள்ளது
வங்கி செய்திகள்
  1. எஸ்.பி.ஐ. வங்கியின் பற்று அட்டை மற்றும் கடன்அட்டைகளைப் பயன்படுத்தி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிக்களை வாங்குவதை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வர்த்தக செய்திகள்
  1. வியட்நாம் அரசு பிட் காயினை பயன்படுத்துவோருக்கு 9000 டாலர் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது
  2. சர்வதேச தொழில் முதலீட்டு மாநாடு மேக்னெட்டிக் மகாராஷ்டிரா மும்பையில் தொடங்கியுள்ளது.
  3. இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீடு ரூ.90,700 கோடியாக உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழக அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  2. சட்ட கல்லுரிகளுக்கான அகில இந்திய விளையாட்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெற்றது இதில் செங்கல்பட்டு சட்ட கல்லுரி அணி சாம்பியன் பட்டதை வென்றது.
  3. மாநில அளவிலான ஏ.எஸ். வேதநாயகம் நினைவுக்கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் ஐஓபி அணி வெற்றி பெற்றது
நியமனங்கள்
  1. நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒளி பதவியேற்றுக் கொண்டார்..
  2. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் வந்துவீச்சு ஆலோசகராக சிமொன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.





Previous Post Next Post