உலக செய்திகள்
- இத்தாலியில் புகழ்பெற்ற வெனிஸ் திருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. வெனிஸ் குடியரசின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வாக ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டுக்குள் 60 வீடியோ செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
- பசிபிக் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச கடற்படைப் பயிற்சி – ஆஐஎம்பிஏசி
- சிரியாவில் உள்ள குர்துப் படையினருக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அமெரிக்காவிடம் துருக்கி ஒப்புக் கொண்டுள்ளது.
- சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து 1000 உற்பத்தி நிறுவனங்களை பொருளாதாரத்தினைச் சீர்திருத்தம் செய்வதற்காக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- விமானப் படையில் சேருவோர், உடலில் டாட்டூ வரைந்திருக்கக் கூடாது என்ற விதிமுறையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
- இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்காக, தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மையத்தை டெல்லியில் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
- 2017 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக 'ஆதார்'அறிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச அளவில் விமானங்களில் இணையதள சேவை அளிக்கும் கோகோ நிறுவனம் சென்னையில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
- தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 50வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
- நடுவானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய ரூ.39,000 கோடி மதிப்பிலான எஸ்-400 டியைம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.